24 special

மத்திய அரசு தடை செய்தது சரி தான்... திடீர் என ஆதரவு தெரிவித்த வீரமணி..! ஆனால் அதையும் நீக்க வேண்டுமாம்..!

K veeramani
K veeramani

திராவிட கழக தலைவர் வீரமணி மத்திய அமைச்சரின் முடிவை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்ட அறிக்கை பின்வருமாறு :-சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு பெண்மணி எழுதிய நூலை, செவிலியர்களுக்கான பாட புத்தகங்களில் ஒன்றாக வைத்தது குறித்து நாடாளுமன்றத்தில் கண்டனம் எழுந்தது.


திருமணத்தின்போது பெண்களுக்காக ‘வரதட்சணை’ வாங்கப்படுவதை நியாயப்படுத்தி, அதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்ற பிற்போக்கான, பொருந்தா கருத்தை வலியுறுத்தியது அந்தப் புத்தகம் என்பதால், ஒன்றிய அரசின் கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், ‘‘உடனடியாக அது பாடப் புத்தகப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்; அதைப் பாட நூலாக வைத்தவர்கள்பற்றி முழு விசாரணை நடத்தப்படும்‘’ என்று கூறியிருக்கிறார்.

அதை நாம் வரவேற்கிறோம்; ‘வரதட்சணை’ என்று திராவிடத்திற்கு எதிராக பெண்களை விலைச் சரக்குபோல் கருதிடும் வேதனையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது தேவையானது மட்டுமல்ல, அக்கருத்து சட்ட விரோதமானது என்பதும் கூடுதல் வாதமாகும்!இதற்காக இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர், குஜராத் மாநிலத்தில் ‘பகவத் கீதை’யைப் பாட நூலாக அந்த மாநில அரசு வைத்துள்ளதுபற்றி கவனத்தில் கொள்ளாதது ஏன்? முன்பு மோடி முதலமைச்சராக இருந்தபோது, எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்களில் மனுதர்மத்தைப் போதித்தது அந்த அரசு, அப்போதே  நாடு தழுவிய அளவில் கடும் கண்டனம் எழுந்தது.

அதேநேரத்தில், காவிக் கட்சியின் அரசியல் லேபரட்டரி என்ற பரிசோதனைக் கூடம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் பகவத் கீதையைப் பாட நூலாக கல்வி நிறுவனங்களில் வைத்துள்ளார்கள்.

அம்மாநில அரசைப் பின்பற்றி மற்றொரு பா.ஜ.க. ஆளும் மாநிலமான இமாச்சலப்பிரதேசத்திலும் ‘பகவத் கீதை’ பாட நூலாம்.

‘பகவத் கீதை’ - அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்திற்கு எதிரான கருத்தான ஜாதியை, ஜாதி தர்மத்தை வலியுறுத்தி பேதம் வளர்க்கும் மனித சமூக சமத்துவத்திற்கு எதிரான நூல் எனவே அதனையும் பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.

எல்லாம் சரிதான் தமிழ் மொழியை காட்டு மிராண்டி மொழி என கூறிய ஈவேராவை பற்றி தமிழக பாட திட்டத்தில்  எவ்வாறு சேர்த்தார்கள் என பதில் கூறுங்கள் வீரமணி என பதிலுக்கு பாஜகவினரும் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.