24 special

அடுத்த 15 நாட்கள் தான் டார்கெட்! பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு கொடுத்த அசைன்மென்ட்..! ஷாக்கான எதிர்க்கட்சிகள்!

annamalai
annamalai

மாதம் மாதம் சிறு தொகையை சேமித்து வைத்தால் பின்பு அது மிகப்பெரிய தொகையாக நம் கண்ணுக்குத் தெரியாமல் சேமிக்க முடியும் என்பார்கள். அது போலத்தான் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியும் கண்ணுக்குத் தெரியாமல் மிக குறுகிய காலத்தில் மடமடவென வளர்ந்து தற்போது தமிழகத்தில் பரவலாக காலூன்றி இருக்கின்றது. ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜக தற்போது ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து மிக பலமான எதிர்வாதம் வைக்கக் கூடிய கட்சியாக உருவெடுத்து இருப்பதன் மூலம் திமுகவுக்கு எதிர்க் கட்சி பாஜகதான் என சொல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டது.


அதேவேளையில் அதிமுகவில் நிலவக்கூடிய குழப்பத்திற்கு நடுவே பாஜக மேலும் வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு சமயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தாமரையின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு பேசி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் ஓர் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். 


அதில், "இந்திய நாட்டில் நிலையற்ற தன்மை நிலவிய போது, ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியோடு தொடங்கப்பட்ட இயக்கம் இன்று உள்நாட்டில் வெற்றிகளையும் வெளிநாட்டில் நன்மதிப்பையும் பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு தந்த பரிசாக தமிழகத்திலும் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதன்மூலம் தமிழகத்தில் தாமரையின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. எனவே இனி தமிழகத்தில் நல்லாட்சியை நடத்தி காட்ட வேண்டியது நம் கடமை. அடுத்து வரும் 15 நாட்கள் மத்திய தலைமை நமக்காக வகுத்து கொடுத்திருக்கும் திட்டங்களை எல்லாம் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செயல்படுத்த வேண்டியது நம் கடமை. அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு அடுத்து வரக்கூடிய இரண்டு வார கால நிகழ்ச்சிகள் மிக மிக முக்கியமானது.

எனவே ஒவ்வொரு மாவட்ட தலைவரும் மண்டல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகளை தங்கள் பகுதிகளில் மிகத் தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். ஆறாம் தேதி அன்று பாஜகவின் ஸ்தாபகர் தினம் இந்த ஒரு நன்னாளில் நாட்டுப்பற்று, தேச ஒற்றுமை, சமூகநீதி பொருளாதார மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தும் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதன் கொள்கைக்கும் நம் நல் வாழ்த்துக்களை தெரிவிப்போம் என குறிப்பிட்டு இருக்கின்றார் அண்ணாமலை.

இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு மிக தீவிரமாக செயல்பட வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது மாவட்ட தலைவர்களுக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய டாஸ்க்காக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜகவுக்கு மிக தீவிரமாக வேலை செய்யும் தொண்டர்களை பாஜக அடையாளம் கண்டு அவர்களை மேன்மேலும் உயர்த்தியும் கட்சியை தமிழகத்தில் வளர்ப்பதில் மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டு உள்ளார் அண்ணாமலை என குறிப்பிடும்படி நாளுக்கு நாள் பாஜகவின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றது.

அதனுடைய வெளிப்பாடே தற்போது அடுத்து வரும் இரண்டு வார நிகழ்ச்சிகளையும் ஆர்வத்துடனும் கவனமுடனும் செய்ய வேண்டும் என அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடமும் தொடர்களிடமும் தெரிவித்து உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.