மத்தியபிரதேசம் : மத்தியபிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் AIMIM கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் AIMIM நிறுவனரும் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி கலந்துகொண்டு பேசினார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் " காங்கிரஸ் நமது தேசத்தின் வீணடிக்கப்பட்ட சக்தியாக மாறிவிட்டது. காங்கிரஸ் தனது இருப்பை இழந்துவிட்டது. அதற்க்கு உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை வீணாக்காதீர்கள். இந்திய நிலத்தை சீன நாடு ரகசியமாக அத்துமீறி ஆக்கிரமித்து வருகிறது. அதனால் பிரதமர் மோடி எல்லைப்பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
எல்லையில் பாதுகாப்புகளை பலப்படுத்தி சீன ஆக்கிரமிப்பை தடுக்கவேண்டும். அகில இந்திய கல்விக்கழக ஆய்வறிக்கையின்படி இஸ்லாமியர்கள் அனைத்து துறைகளிலும் பின்தங்கியே உள்ளனர். இதற்க்கு யார் பொறுப்பு என காங்கிரஸையும் பிஜேபியையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக மாறாமல் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.
காங்கிரஸ் ஒரு செலவழிக்கப்பட்ட சக்தி. உங்கள் வாக்குகளை ஒருபோதும் வீணடிக்காதீர்கள்" என AIMIM நிறுவனர் அசாதுதீன் ஒவைசி தேர்தல்பிரச்சாரத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். இதற்க்கு பதிலளித்துள்ள மத்தியபிரதேச காங்கிரஸ் "முதலில் வகுப்புவாத பேச்சுக்களை ஒவைசி நிறுத்த வேண்டும். பாரம்பரிய கட்சியான காங்கிரசை குறைகூற ஒவைசிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை" என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.