
திமுகவில் இருந்து முக்கிய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரையின் முகமாக அறியப்படுபவர் அமைச்சர் பிடிஆர். பாரம்பரியமான திமுக-வைச் சேர்ந்தவர். அதேசமயம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் இதற்கிடையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ பரவியது. அந்த ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் சேர்த்துவிட்டனர் என்று கூறுவதுபோல் இடம் பெற்றது. அதன் பின்னர் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டசபையிலே தனது துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதாகவும், யாரிடம் அதிகாரமும், நிதியும், திறனும் இருக்கிறதோ என்று வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பகிரங்கமாக சட்டசபையில் வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் டெல்லியில் சில தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பி.டி.ஆர் .திமுகவில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல்களும் கிடைத்துள்ளது.அதுமட்டுமில்லாமல் திமுகவில் உள்ள மற்றொரு முக்கிய புள்ளியும் விரைவில் மாற்று கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள் கட்சிகளை மாற்றுவது பொதுவான நிகழ்வு. வெற்றி பெறக்கூடிய கட்சிக்கு, மாறுவது வழக்கம் என்பதால், இந்த நகர்வு இயல்பானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவில் இணையவுள்ள அந்த முக்கிய பிரமுகர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. அவர் தேனியை சேர்ந்தவர் என்றும் சிலர் கூற, வேறு சிலரோ அவர் மதுரையை சேர்ந்தவர் என தெரிவிக்கின்றனர். அந்த முக்கிய பிரமுகரை கட்சியில் மதிப்பதில்லை பணம் மற்றும் வேலையை மட்டுமே வாங்கி கொள்கிறார்கள் இதுவே அவரது கட்சி மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
சுமார் 5,000 ஆதரவாளர்களுடன் அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய பிரமுகரின் கட்சி மாற்றம், திமுகவின் அடித்தளத்தை கணிசமாக பலவீனப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்தேனியை சேர்ந்தவரா அல்லது மதுரையை சேர்ந்தவரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவில் மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், மூத்த நிர்வாகிகள் இடையேயான சிக்கல் ஆகியவற்றை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது
ஒரு முக்கிய பிரமுகரின் விலகல் திமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். தேர்தல் சமயங்களில் கட்சி உறுப்பினர்கள் மாறும் நிகழ்வுகள், கட்சிகளின் பலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், அதிமுக வலுவான சவாலை எதிர்கொள்ளலாம்.
திமுகவின் இந்த முக்கிய பிரமுகர்அதிமுகவில் இணையும் முடிவை எடுத்ததற்கான காரணங்கள் குறித்து பல யூகங்கள் கூறப்படுகின்றன. மதிப்பு இல்லை விரக்தி போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.