
தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் மேலும் மிக பெரிய தேசப்பற்றாளர். அவருக்கு என தனி ரசிகர்களின் ராஜ்ஜியமே உள்ளது எனலாம். அவ்வளவு பெரும் படையை உருவக்கியுள்ளார்.இதற்கிடையே நடிகர் அஜித் குமார் சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிரதமர் மோடியை சுட்டி காட்டி பேசியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நடிகர் அஜித் மேலும் மிக பெரிய தேசப்பற்றாளர் பஹல்காம் தீவிரவாத தாக்குதால் குறித்து பெரும்பாலான தமிழக நடிகர்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் நடிகர் அஜித் குமார் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நம் நடந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் ரேஸில் வெற்றிபெற்ற போது தேசிய கொடியை கட்டியணைத்து கொண்டார்.
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த விருதை மத்திய அரசு அறிவித்தது. இந்த பத்ம பூஷண் விருதை அஜித் குமார் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி பெற்று கொண்டார். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கையில் இருந்து அஜித் குமார் பத்ம பூஷண் விருது பெற்றார். இந்நிலையில் தான் அந்த விருதுக்கு தன்னை தேர்வு செய்து வழங்கியதை நினைவு கூர்ந்து அஜித் குமார் ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
33 வருட பயணம் குறித்து அஜித் அறிக்கையில் சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானது தான். இந்த பயணத்திற்காக மழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி!
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.எனக்கு மதிப்புமிக்க பத்மபூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரெபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.தமிழக அரசியல் தலைவர்கள் என மட்டுமே குறிப்பிட்டிருந்த நிலையில் ஸ்டாலின் பெயரை முற்றிலுமாக தவிர்த்து பிரதமர் மோடி குறித்து பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை தமிழக முதல்வர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.