திமுகவின் கருவூலம் என அழைக்கப்படும் திமுக எம் பி ஜெகத் ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை திமுக தலைமையை ஆட்டம் காண செய்து இருக்கிறது. 200 மேற்பட்ட அதிகாரிகள் ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 96 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 96-க்கும் மேற்பட்ட இடங்களில்அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.பூட்டை உடைத்து சோதனை: இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்.மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 96க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில்அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தில் மணல் மாபியா மூலம் பெறப்பட்ட பணங்களை மாற்றி கொடுத்தது தொடர்பாகவும் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மீ எம் பி கொடுத்த தகவலின் அடிப்படையில் மது பான கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 100 நாட்களை கடந்தும் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது திமுகவின் கருவூலம் எனப்படும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் பூட்டை உடைத்து வருமான வரித்துறை உள்ளே நுழைந்து இருப்பது வலுவான ஆதாரம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து ஜெகத் ரட்சகனும் தற்போது வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி இருப்பது முதல்வர் ஸ்டாலினை அதிர செய்து இருக்கிறது. அடுத்தடுத்து ரெய்டு குறித்து தமிழக ஊடகங்கள் சொல்லாத விஷயங்களை அறிந்து கொள்ள TNNEWS24 பக்கத்தை பின்பற்றி இணைந்து இருங்கள்.