Cinema

தளபதி விஜய் மாணவர்களுக்கு நல்லதும் பண்ணீங்க..இப்போ நீங்களே இப்படி பேசலாமா?

actor vijay
actor vijay

தமிழ் சினிமா மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது வெளியான 20.5 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று, தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்து,  இணையத்தில் ஸ்தம்பித்து வருகிறது..மறுபக்கம் பயங்கரமான கண்டனமும் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் கடைசியாக நடித்து வெளியான படம் வாரிசு இந்த படம் மிகவும் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடைத்ததாக லோகேஸ்க் கூட்டணியில் இணைந்தார் தளபதி விஜய், லோகேஷ், விஜய இணையும் இரண்டாவனது படம் லியோ. ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பிறகு விஜயின் லியோ படத்திற்கு தான் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியிருந்தது. லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிந்து திரைக்கு 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ட்ரைலரில் குடும்பங்களுடன் வாழும் விஜய் ஜோடியாக திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அர்ஜுன், சஞ்சய்தத் உள்ளிட்டோரின் மிரட்டும் சண்டைக்காட்சிகள் பயங்கரமாக வந்துள்ளது. 


லோகேஷ் படம் என்றாலே சண்டைக்காட்சிகள் மற்றும் வன்முறை நிறைந்தே இருக்கும் அந்த வகையில், லியோ படத்தின் ட்ரைலரில் ஒரு வார்த்தை அமைத்துள்ளது அதற்கு சமூக வலைத்தளத்தில் கண்டனம் எழுந்து வருகிறது. திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், "லியோ ட்ரைலர். 'எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி'.... விஜய் பேசும் வசனம். Censor certificate fake னு சொன்ன டுபாக்கூர்ஸ். ட்ரைலர்லயே இந்த கெட்ட வார்த்தை வருது. அப்ப படத்துல எத்தனை இருக்கோ. இப்ப என்னடா சொல்லுறீங்க? இதுவும் ஃபேக்கா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் மற்றொரு பதிவில், 'அது ஃபேக் சென்சார் சர்டிஃபிகேட். இது ஃபேக் ட்ரைலர்' 2K Boomers கதறல்" என பதிவிட்டிருக்கிறார்.இவரை தொடர்ந்து லியோ படத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட லைனை பெண்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சர்ச்சையை எழுப்பி இருந்தார் ராஜேஷ்வரி ப்ரியா. இவர் ட்ரைலரை பார்த்துவிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். "லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குனர். என கடுமையாக விமரித்துள்ளார்.

பலரும் சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.  லோகேஷ்  மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். என்று சமூக தளத்தில் அவர்களது கண்டனத்தி தெரிவித்து வருகின்றனர். மற்றோரு பக்கம் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நிறைய காட்சிகளை மற்ற ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி செய்துள்ளார் என்பது ட்ரைலரை பார்க்கும்போது தெரிகிறது என்று அஜித் ரசிகர்கள் அவர்கள் பங்கிங்கு கண்டம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே லியோ படம் பிரபல ஹாலிவுட் படமான "ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்" கதையை தழுவி எடுப்பதாக லோகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பெரிய நடிகர் விஜய் இத்தகைய செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது, மேலும் படத்தில் இந்த வார்த்தை மியூட் பண்ணாலும், ஓடிடி உள்ளிட்டவற்றில் இடம்பெற வாய்ப்பு அதிகம் என்பதால் விஜய் அதை தவிர்த்து இருக்க வேண்டும் என ஏராளமான கண்டனங்களும் குவிந்து வருகின்றன.