24 special

இன்னும் பத்தே நாள் தான்.... அறிவாலயத்திற்கு குறிக்கப்பட்ட நாள்....

mk stalin, ponmudi
mk stalin, ponmudi

முன்பில்லாத வகையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீதான வழக்குகள் தீவிரமாக்கப்பட்டு அதில் தற்போது இரண்டு அமைச்சர்கள் ஒருவர் சிறை சென்று, மற்றொருவர் சிறை செல்லவிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்ற செந்தில் பாலாஜியை போன்று தற்பொழுது அமைச்சர் பொன்முடியும் சிறை செல்ல உள்ளார். அதாவது 2006 முதல் 2011 ஆண்டிற்கிடப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக 2011 க்கு பிறகு இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது இருப்பினும் இந்த வழக்கின் விசாரணை முடிவு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.


ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல்முறையீடு செய்தனர். இதனை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேற்கொண்ட மறு விசாரணையில் இந்த வழக்கு தற்போது முடிவை கண்டுள்ளது. அதாவது  செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது என்றும் இதனால் அவரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தார். இதனை அடுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டது அவருக்கு வழங்கப்பட்டிருந்த கார் மற்றும் பாதுகாப்பு சேவைகள் என அனைத்தும் அவரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது.

இதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு திமுகவின் ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளுக்காகவே சிறையில் தனி ப்ளாக்கை ஒதுக்க வேண்டும் என்ற பல விமர்சனங்களை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் மணி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நிச்சயமாக அமைச்சர் பொன்முடியின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும், ஜனவரி முதல் வாரத்தில் தான் சுப்ரீம் கோர்ட் திறக்கப்படுகிறது அதனால் இரண்டு வாரங்கள் இப்படியே போய்விடும், உடனடியாக ஸ்டே வாங்கினால் சிறைக்குப் போகாமல் தவிர்க்க முடியும் கண்விக்சனை ஸ்டே பண்ணால் மட்டுமே எம்எல்ஏ பதவி தப்பும் ஆனால் வழக்கமாக சுப்ரீம் கோர்ட் கண்விக்சனை ஸ்டே பண்ணாது! அதிகம் பேர் இதனை சூமோட்டா கேஸ் என்று நினைக்கிறார்கள் ஆனால் இது இரண்டாவது செத்து குவிப்பு வழக்கு அதுவும் வேறு வழக்காக இருந்தாலும் பரவாயில்லை இரண்டுமே சொத்து குவிப்பு வழக்கு!

ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு சொத்து குவிப்பு வழக்கு பெற்றுள்ளார் ஏனென்றால் ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வளவு சொத்துக்களை சூறையாடுவது! 2001 ஜெயலலிதா அம்மாவால் போட்ட வழக்கில் இருந்து 2020இல் வெளியானார், ஆனா 2006 ஆட்சிக்கு வந்த பிறகும் சொத்துக்கு குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி தண்டனைகளை பெறுவது  I.N.D.I  கூட்டணியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! இந்தியா கூட்டணி ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம் என ஏற்கனவே பாஜக பிரச்சாரம் செய்து வருவது வலுபெறும்! என தெரிவித்துள்ளார். இதனால் அறிவாலய தரப்பினர் தற்பொழுது கவலையில் உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.