திமுக அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் மின்சாரம் ஆகிய இரு துறைகளை தன்னிடம் வைத்து திமுக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் போன்று கட்சிக்குள் நுழைந்த சில மாதங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இருப்பினும் அவர் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றிய வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இது குறித்து அமலாக்க துறையும் வருமானவரித்துறையும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டதும் அந்த சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜியை கைது செய்ய முற்படும்பொழுது எனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அதற்குப் பிறகு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது, இருப்பினும் அன்றிலிருந்து அவர் நீதிமன்ற காவலில் தான் இருந்து வருகிறார்.
சிகிச்சை அனைத்தும் முடிந்த பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு ஒவ்வொன்றும் தள்ளுபடி ஆகிக்கொண்டே இருப்பது செந்தில் பாலாஜி தரப்பை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது நீதிமன்ற காவல் தற்போது 16வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவில் இணைந்து சில மாதங்களிலேயே இரு பொறுப்பில் அமர்த்தபட்ட செந்தில் பாலாஜிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கூறப்படுகிற அளவில் திமுக அறிவாலயத்தில் ராஜாவாக சுற்றியவர் தற்போது சிறையில் இருக்கிறார் என அரசியல் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை போன்று அமைச்சர் துரைமுருகனும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் செந்தில் பாலாஜியை சிறையில் அனுப்பிய அதே அதிகாரி துரைமுருகன் மீதும் கை வைக்க உள்ளதாக பிரபல அரசில் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது சவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் துரைமுருகன் அப்செட் ஆனாரோ? என்ற வகையில் கேள்வி எழுப்பி அதற்கு பதிலாக அவர் அப்செட் ஆனதற்கு வேறொரு காரணம் இருக்கிறது எனக்கூறி பத்திரிகை செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார் சவுக்கு சங்கர். அந்த செய்தியில் 'மணல் விவகாரத்தை விசாரித்து வந்த அமலாக்கத்துறையில் மூத்த அதிகாரி மீது ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்கு பறந்து இருக்கின்றன. அந்த புகார்களை விசாரித்து மத்திய உளவு அமைப்பும் ரிப்போர்ட் அளித்துவிட மணல் விவகாரம் தற்போது வேறோர் அதிகாரியின் கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அப்படி புதிதாக பொறுப்பேற்ற கண்டிப்பான பேர்வழியாம்! இவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மேற்பார்வையிட்டதோடு அவர் கைது செய்யப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் என்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் துரைமுருகன் ஏக அப்செட் என்கிறது காட்பாடி வட்டாரம்! இதற்கிடையில் துரைமுருகன் உடல்நிலையில் குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்.
எதற்கும் இருக்கட்டுமே என்று துரைமுருகனின் உடல்நிலை குறித்து இப்போதே ஒரு பைலை தயாரிக்க தொடங்கி இருக்கிறார் அவருடைய வழக்கறிஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை சவுக்கு சங்கர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இப்படி செந்தில் பாலாஜி சிறை செல்ல காரணமாக இருந்த அதிகாரியே துரைமுருகனின் வழக்கை விசாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது துரைமுருகன் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக துரைமுருகன் தான் சிக்குவார் என்று போடப்பட்ட கணக்கில் தற்பொழுது பொன்முடி சிக்கி உள்ளார் இதற்கு அடுத்ததாக நிச்சயமாக துரைமுருகன் தான் சிக்குவார் என்ற அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.