தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்து வருகிறன்றனர். இந்தநிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக கரூரில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த வண்ணமே உள்ளன. இதனால் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற கலக்கத்தில் ஜோதிமணி உள்ளாராம்.
கரூர் தொகுதியில் காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றும் குறிப்பாக ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், ஜோதிமணியோ சீட் பெறுவதில் தீவிரமான பணிகளை செய்து காங்கிரஸ் தலைமயிடம் கூறி பிடிவாதத்துடன் சீட்டை பெற்றார். அவருக்கு தேர்தல் ஆணையம் கை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. திமுக தலைவர்களுடன் ஜோதிமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜோதிமணிக்கு எதிராக கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்களாம் ஜோதிமணி என்ற பெயரில் இருவர்கள், கூட்டணி பக்கம் தான் பிரச்சனை என்றால் புதிய பிரச்சனைகளாக சுயேட்ச்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கியது. விசிக மொத்தமாக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதியில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், கரூரில் போட்டியிடும் சுயேட்ச்சை வேட்பாளர் ஒருவருக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இதனால் கரூரில் ஜோதிமணிக்கு வாக்குள் பிரியலாம் என்று கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதுவே காங்கிரஷை சேர்ந்த ஜோதிமணிக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில் ஜோதிமணி பெயரில் இரண்டு சுயேட்ச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் சுயேட்ச்சியாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போலவே ஓ. பன்னீர் செல்வம் துன்ற பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர் இதுவும் அந்த தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜோதிமணி மக்களிடம் என்னை வெற்றி பெற செய்தால் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவேன் என்று கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், பிரச்சாரத்தில் மக்கள் ஜோதிமணியை பார்த்து 5 வருஷத்துக்கு முன்னாடி உங்களை பார்த்து என கேள்விகை வைக்கின்றனர். முன்னதாக தொகுதி பக்கம் வராததால் ஜோதிமணியை விரட்டி அடித்தனர். ஜோதிமணிக்கு இது ஒரு கடினமான தேர்தல் என்று காங்கிரஸ் நிர்வாகிகளே கூறுகின்றனர்.