24 special

ஜெய்சங்கரின் 20 சந்திப்புகள்! ஈரான் நடத்திய ரகசிய மூவ் என்ன! அம்பலமாகும் உண்மைகள் சல்மா அம்மையாரின் பாகிஸ்தான் பாசமும்

JAISHANKAR,MOJTABAKHAMENEI
JAISHANKAR,MOJTABAKHAMENEI

ஈரான் - அமெரிக்கா இடையிலான 15 நாள் போர் நிறுத்தக் கெடு என்பது ஒரு தற்காலிக அமைதி அல்ல, அது அடுத்த ஒரு பெரும் போருக்கான தீவிரத் தயாரிப்பாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தி ஒழிப்பு மற்றும் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரைத் தொடங்கின. , மேலும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவதிலேயே அமெரிக்கா தற்போது குறியாக உள்ளது. அந்த யுரேனியத்தைத் தங்களிடம் ஒப்படைத்தால் ஈரானுக்குப் பெரும் சலுகைகள் வழங்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்த நிலையில், ஈரான் இந்த விவகாரத்தை ஹோர்முஸ் கடல் சந்திக்குத் திசைதிருப்பியுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டுமானால், அதற்குப் பதிலாக ஹோர்முஸ் கடல் பாதையின் முழு அதிகாரத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.


இயற்கையாக அமைந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் உரிமை கொண்டாடி கட்டணம் வசூலிக்க நினைப்பது சர்வதேச விதிகளுக்குப் புறம்பான அடாவடித்தனமாகவே கருதப்படுகிறது. அணுசக்தி என்ற பலத்தை இழந்தால், அதற்கு ஈடாக இத்தகைய பொருளாதார ஆதாரத்தைப் பெற ஈரான் பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், கப்பல்களின் அளவிற்கு ஏற்ப 50 ஆயிரம் டாலர் முதல் இரண்டு மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை சவுதி அரேபியா, அமீரகம், குவைத் போன்ற அண்டை அரபு நாடுகளே கடுமையாக எதிர்க்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கட்டணத்தைச் சீன யுவானில் செலுத்த வேண்டும் என்ற ஈரானின் நிபந்தனை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உடன்பாடானதல்ல. இத்தகைய கூடுதல் கட்டணங்கள் உலக அளவில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இதனை ஏற்கப் போவதில்லை.

இந்த 15 நாள் அவகாசம் என்பது ஈரானுக்கானது அல்ல, மாறாக ஈரானின் அபாயகரமான திட்டங்களை உலக நாடுகளுக்கு விளக்கி, அவர்களைத் திரட்டி ஈரானைத் தாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார். பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் ஒரு சமரச நாடாகச் செயல்படவில்லை; மாறாக ஈரானின் யுரேனியத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஒரு இடமாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரானா மலை அணுசக்தி முகாமைப் பயன்படுத்தவே பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டது.

தமிழக அரசியலில் சல்மா போன்றவர்கள் பாகிஸ்தானின் தலையீட்டால் போர் நின்றது எனக் கூறுவது அடிப்படைத் தரவுகள் அற்ற வாதமாகும். எகிப்து, ஓமன், ஜோர்டான் எனப் பல நாடுகளில் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்திய அமைச்சர் ஜெய்சங்கரைப் பலமுறை சந்தித்துப் பேசியதே முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் இதில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.