24 special

களமிறங்கிய ஜேம்ஸ் பாண்ட்.... பாகிஸ்தானை பந்தாடும் ஆப்கான்... மோடி போட்ட பக்கா பிளான் பதறும் பாக்

PMMODI,SHAHBAZSHARIF
PMMODI,SHAHBAZSHARIF

ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை.இந்தநிலையில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இப்போது போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இரண்டுமே இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் போதிலும் அடித்து கொள்கிறது,


பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரித்தது. ஆப்கன் தலைநகர் காபூலில் சில இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களே இதற்குக் காரணம். இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆப்கன் தாலிபான் எதிர்ப்பு மட்டுமின்றி பதிலடியும் கொடுத்தது. பாகிஸ்தானில் அங்கூர் அட்டா, பஜவுர், குர்ரம், திர் மற்றும் சித்ரால் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து தாலிபான் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியது. கைபர் பக்துன்க்வாவில் உள்ள இந்த ஐந்து ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆப்கான் தாலிபான்கள் பாகிஸ்தானை விரட்டி விரட்டி விரட்டி அடிக்க தொடங்கியுள்ளது. இது இந்தியா கொடுத்த ஐடியா என்று பாகிஸ்தான் புலம்பி தள்ளி வருகிறது. 

அமெரிக்க பாகிஸ்தானுக்கு தொடர் உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவை எதாவது ஒரு ரூபத்தில் அடி பணியவைக்க அமெரிக்காபல வகையில் முறிச்சிது வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக உள்ள ஆப்கானிஸ்தானை அரவணைத்து பாகிஸ்தானை சிதறடித்து வருகிறது இந்தியா. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெற்ற பின்னர், 2021-ம் ஆண்டு தலீபான் அமைப்பு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அஜித் தோவால்  ஜெய்ஷ்ங்கர் உள்ளிட்டவர்களிடம் பாகிஸ்தான் குறித்து பேசப்பட்டுள்ளது. இது பகிஸ்தானுக்குநெருக்கடியினை கொடுத்துள்ளது. 

தலிபான்களின் ஆதரவு பெற்ற டிடிபி  குழு பாகிஸ்தான் மீது பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. டிடிபி அமைப்புக்கு ஆப்கான் தாலிபான் ஆதரவளிக்கிறது. மேலும், அதன் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது" என்பதே பாகிஸ்தான் நிலைப்பாடு! கடந்த 2024இல் மட்டும் பாகிஸ்தான் படைகள் மீது 600க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இந்த டிடிபி நடத்தியுள்ளதாகச் சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன.

இப்போது இந்தக் குழுவை நூர் வாலி மெஹ்சுத் என்பவர் வழிநடத்தி வருகிறார். ஆப்கான் தாலிபானுக்கு விசுவாசமாக இருக்கும் டிடிபி, பாகிஸ்தானில் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்த விரும்புகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான்- அமெரிக்கா கூட்டணியைத் துரோகம் எனச் சொல்லி எதிர்க்கிறது. மேலும், இதை முஸ்லிம்களுக்கு 'துரோகம்' என்று கருதுகிறது.

மறுபுறம் இந்த டிடிபி பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதிகளில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனாலும் பாகிஸ்தானால் இந்தக் குழுவை அழிக்க முடியவில்லை. இது பாகிஸ்தான் ராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.

டிடிபி அமைப்பின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என சொல்லியுள்ள பாகிஸ்தான் அரசு, அவர்களை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளது. இது ஆப்கானிஸ்தானை மறைமுகமாக விமர்சிப்பதாகும். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எங்கிருந்தாலும் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் கடந்த வாரம் கூறியிருந்தார் அதைத் தொடர்ந்தே தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதன் பின்னால் இந்தியா இருக்கிறது என பாகிஸ்தான் புலம்பி தள்ளி வருகிறது.