24 special

ஜப்பானின் FX ஸ்டெல்த் பைட்டர் ஜெட்..! இணைகிறதா இந்தியா..?

Japan's FX Jet
Japan's FX Jet

புதுதில்லி : தற்போதைய இந்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதிலும் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை மேலைநாடுகளுக்கு விற்பனை செய்வதிலும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது. இதன் பலனாக வல்லரசு நாடுகள் ஆயுத மற்றும் விமானதயாரிப்புகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.


இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கான  FX ஸ்டெல்த் பைட்டர் ஜெட் விமானங்களை ஜப்பான் இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக ஜப்பானின் செய்தித்தாளான நிக்கெய் செய்திவெளியிட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு போர்விமானங்கள் மற்றும் அதிபயங்கர ஆயுதங்களை வழங்கும் ஜப்பானின் திட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த திட்டம் சர்வதேச கூட்டாளிகளுடன் சேர்ந்து  FX ஸ்டெல்த் பைட்டர் ஜெட்டை உள்நாட்டிலேயே தயாரிக்கும் என தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (MHI) தொடங்கியுள்ளது. இது F 2 அடுத்த தலைமுறைக்கான போர்விமானத்தை உருவாக்க உள்ளது.

மேலும் அடுத்த 2024ல் அதற்க்கான முன்மாதிரியை வெளியிட உள்ளது. டோக்கியா அமெரிக்காவிலிருந்து பெற்ற  F 15 விமானங்களுக்கு மாற்றாக ஆறாவது தலைமுறைக்கான  FX ஸ்டெல்த் பைட்டர் ஜெட் தயாரிப்பில் இந்தியாவுக்கு பங்களிக்க விரும்புவதாக அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ரக விமானம் 2030ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால் இந்தியா தனது சொந்த  5.5 ஜெனரல் திட்டத்தை புறக்கணித்து ஜப்பானுடன் கைகோர்க்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை மேக் இந்த இந்தியா திட்டத்தில் ஜப்பான் இணைய விரும்பினால் டோக்கியோவுக்கு இந்தியா சம்மதம் தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் சமீப வருடங்களாக இந்தியா உள்நாட்டு தயாரிப்பில் முனைப்பு காட்டிவருகிறது. 

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படாமலேயே இருந்த DRDO தற்போது அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளிலும் பாதுகாப்பு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தகுந்தது போல செயல்பட்டு வருகிறது. இதற்க்கு மத்திய அரசின் ஒத்துழைப்பே காரணம் என DRDO இயக்குனர் சதீஸ் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின்  FX ஸ்டெல்த் பைட்டர் ஜெட் F 35 மற்றும் சீன ரஷ்ய ஸ்டெல்த் பைட்டர்களை விட முன்னோடியாக இருக்கும் என கருதபப்டுகிறது. இதன் திட்ட செலவு 48 பில்லியன் டாலர் என கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியா இணைந்தால் அதன் பங்கும் கணிசமாக இருக்கும். ஆனால் இந்தியா கடற்படைக்கான 4.5ஜெனரேஷன் TEDBF திட்டத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.