24 special

ஜீவன் பிரமான் பத்ரா: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (இபிஎஃப்ஓ) ஓய்வூதியம் பெறுவோர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு வாழ்க்கைச் சான்றிதழை (டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்) சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானது. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதிய நிதியைப் பெற தகுதியவற்றர்களாக கருதப்படுவார்கள். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் அல்லது வாழ்க்கைச் சான்றிதழ்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சமர்ப்பிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வங்கி அல்லது இணையம் மூலமாக முயற்சிக்கலாம். 


ஓய்வூதிய பலன்கள் தொடர, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் வழங்க வேண்டும். ஒரு வருடம் கடந்த பிறகும் உங்களுக்கு காலக்கெடு தெரியாவிட்டால், உங்களால் ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். உங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழின் நிலையை மதிப்பாய்வு செய்வதன் மூலம், நீங்கள் சரியான நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் என்றால் என்ன?ஓய்வூதியதாரரின் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் மற்றும் உடல் விவரங்களைக் கொண்ட டிஜிட்டல் ஓய்வூதிய சான்றிதழ் ஆகும். IT சட்டத்தின் கீழ் ஒரு முறையான சான்றிதழ் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் ஆகும். ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் சான்றாக இது செயல்படுகிறது, இதன் அடிப்படையில் ஓய்வூதியத்தின் மாதாந்திர பலன் உள்ளது.

மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பரிசோதிப்பது எப்படி? செல்போனில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான செயலியை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதன் மூலமாக காலஅவகாசம், புதுப்பிப்பு, விண்ணப்பம் போன்ற செயல்களை செய்து கொள்ளலாம். அது எப்படி என பார்க்கலாம்... - https://jeevanpramaan.gov.in/ இணையதளம் அல்லது செயலி வாழ்க்கை சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.

-முதலில் செல்போனுக்கான ஜீவன் பிரமான்  ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, கேப்ட்சாவை பூர்த்தி செய்து பதிவிறக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.  - இதற்கான OTP உங்களுடைய மெயிலுக்கு அனுப்பப்படும். - OTP-யை பதிவு செய்து, மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். - அதன் பின்னர் விண்ணப்பதாரர் தங்கள் ஆதார் எண், ஓய்வூதிய கட்டண உத்தரவு, வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த போர்டல் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஆதார் தளத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர் அடையாளத்திற்காக தங்கள் கைரேகையை சமர்ப்பிக்க வேண்டும்.

வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, ஜீவன் பிரமான் போர்டல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும். அதன் மூலம் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.