சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து சிரிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் படி தாயாகம் திரும்பிய தமிழர்கள், நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட வால்பாறையில் அரசு தேயிலை தோட்டத்தில பணியாற்றி வரும் நிலையில் தற்போது இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அங்கு பல வருடமாக பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கூட தராமல் அவர்கள் வீடுகளை காலி செய்ய அரசு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் படி, தாயகம் திரும்பிய தமிழர்களின் மேம்பாட்டிற்காக 1968ம் ஆண்டு திமுக அரசால் அரசு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) உருவாக்கப்பட்டது. இதில் நீலகிரி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், வால்பாறை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களில் 4,000 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட 9,000 பேர் பணியாற்றி வந்தனர். ஆனால் அரசு படிப்படியாக நஷ்ட கணக்கு காட்டி ஆயிரக்கண்ணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது 3,800 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் நிதி நெருக்கடி நீடித்து வருவதாக கைவிரித்துள்ளது தமிழக அரசு.
மற்றொருபுறம் 200க்கும் மேற்பட்ட ஹெக்டர் தேயிலை தோட்டத்தை வனத்துறையினருக்கு ஒப்படைத்த நிலையில், மேலும் பல நூறு ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு கொடுக்க ஆய்வு செய்வதை கண்டித்தும், மேலும் பல்வேறு நில பிரச்சனைகளால் நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் கடும் பாதிப்பு உள்ளாகி உள்ள கூட்டணி கட்சிகள் கண்களையும், எதிர்க்கட்சி வாயையும் மூடிக்கொள்ள தொழிலாளர்களுக்காக பாஜக களத்தில் குதித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் கபட நாடகத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். “வெளியில் இருந்து பார்க்க நஷ்டத்தில் இயங்கும் தேயிலை நிறுவனத்தை நடத்த முடியாமல் அரசு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தாலும் அதனுள் மறைந்திருக்கும் உண்மையான விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்”.
இன்று கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தேயிலை தோட்டத்தை கொஞ்சம், கொஞ்சமாக வனத்துறைக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு, கூடிய விரைவில் முழுவதுமாக நஷ்டக்கணக்கு காட்டி கோபாலாபுரத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு விற்க முயல்வதாக குற்றச்சாட்டியுள்ளார்.
தனியார் டீ எஸ்டேட்டுகள் லாபகரமாக இயங்கும் போது, டான் டீ மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதற்கு தமிழக அரசே காரணம் என்றும், தமிழக அரசு தோல்வியை ஒத்து கொண்டு, எழுதி கொடுத்தால் டான் டீயை மத்திய அரசு, ஏற்று நடத்த தயார்’ என்றும் ஓபன் சேலஞ்ச் விட்டுள்ளார்.
ஆம், மாநிலம் சார்ந்த நிறுவனங்களை தங்களால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படைக்கும் சம்பவங்கள் உண்டு. மத்திய அரசு அந்நிறுவனங்களை கையகப்படுத்தி உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்த திட்டமிடும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்தால் தமிழக அரசு இதனைச் செய்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் இதுகுறித்து ஆலோசனையாவது நடத்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு 5,315 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு தாரை வார்ப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மறைமுக நோக்கம் அந்த தேயிலை தோட்டங்களை கையகப்படுத்தும் முயற்சியாக தான் இருக்கும் என அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார்.
1974ல் தங்களது ஆட்சியின் போதுதான் கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்படைத்து மீனவ மக்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்த திமுக அரசு, இப்போது தேயிலை தோட்டங்களை தன் வசப்படுத்த திட்டமிட்டிருக்கும் திமுக ‘டான் டீ’ தொழிலாளர்களை வறுமையின் பிடியில் விட தீர்மானித்துள்ளது தெளிவாகியுள்ளது.