
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயதில் அரசியலில் நுழைந்த ஜோதிமணி இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட இவர் அதிமுக வேட்பாளர் ஆன தம்பிதுரையை வென்று கரூர் தொகுதியின் எம்பி யாக வலம் வருகிறார், எம்பியான இவர் தனது எதிர்க்கட்சிகளையே கடுமையாக பேசி விளம்பரம் தேடிக்கொள்வார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்திகளையும் கரூர் எம்பி ஜோதிமணி பெற்று வருபவர். ஏனென்றால் கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிமணி தன் தொகுதிக்கு தேவையானவற்றை செய்வதை விட பாஜகவையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் எதிர்ப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.
அப்படியே சமூக வலைதளங்களில் சமீப காலமாகவே அதிக அளவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குறித்து விமர்சனங்களை முன்வைத்தும் அதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி காங்கிரசையை அலறி அடித்து ஓட வைத்தது. அதாவது அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்து ஜோதிமணி விமர்சிக்கும் வகையில் பேசியதால் அதற்கு அண்ணாமலை ஜோதி மணியின் சொந்த தொகுதியான கரூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஜோதி மணியை விட்டு வைக்கிறேன் பல கேள்விகள் என்னாலும் கேட்க முடியும் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமாருக்கும் ஜோதிமணிக்கும் என்ன தொடர்பு என்று என்னாலும் கேட்க முடியும் எதற்காக டி கே சிவக்குமார் ஜோதி மணிக்கு பணம் கொடுக்கிறார் என்றும் என்னால் கேட்க முடியும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது ஆனால் அவ்வளவு தரக்குறைவாக நான் பேசமாட்டேன்! பெண் என்பதால் அவரை விட்டு விடுகிறேன் பொழச்சி போகட்டும் எனக் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சி மற்றும் பாஜகவை எதிர்த்து வந்த ஜோதிமணி தனது தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்து வந்துள்ளார் அதற்கான விமர்சனங்களையும் அப்பகுதி மக்கள் முன்வைத்து வந்தனர். அப்படி ஒரு நிலையில் திடீரென தனது தொகுதி பக்கம் சென்ற ஜோதி மணியை அப்பகுதி மக்கள் அனைவரும் இவ்வளவு நாள் வராமல் இப்ப மட்டும் எதற்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி அவரை விரட்டி அனுப்பி உள்ளனர். இப்படி தன் தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் கொண்டு வராமல் அண்ணாமலையை குறித்து மட்டும் விமர்சனங்களை முன்வைத்து வந்த ஜோதி மணிக்கு செல்லும் பகுதிகளில் எல்லாம் எதிர்ப்புகளும் பின்னடைவுகள் மட்டுமே ஏற்பட்டது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று உலா வருகிறது அதில் பொதுமக்கள் அனைவரும் ஜோதிமணி எம் பி யை சூழ்ந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர் அதற்கு ஜோதிமணி எம்பி கண்டிப்பாக இதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதற்கு உங்களைத்தான் ஊருக்குள்ளே பார்க்க முடிவதில்லையே எம்பி தேர்தலில் நின்ற அன்று பார்த்தது உங்களை அதற்குப் பிறகு எங்கு ஊருக்குள் உங்களை பார்க்க முடிகிறது!
கரூர் சட்டமன்றத்திற்கு எத்தனை முறை இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று பொதுமக்கள் அனைவரும் கேள்விகளை முன்வைக்க அதற்கு பதில் அளிக்காமல் ஜோதிமணி அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இணையத்தில் வைரலாகிறது. அதுமட்டுமின்றி இந்த வீடியோ பழசா புதுசா என்னன்னு தெரியல ஆனா ஜோதிமணி இதுபோன்று விரட்டப்படும் வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறதே என விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு ஜோதிமணி விரட்டியடிக்கப்படும் வீடியோ வைரலாவது தற்போது ஜோதிமணி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.