
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா இவர் கன்னடத்தில் முதல் முறையாக நடிகையாக திரையில் அறிமுகமானவர். கன்னடா, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடிப்பவர் ஆவார். இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார் இந்த படம் தமிழிலும் வெளியானது. இந்நிலையில், இருவருக்கும் தீர்மானம் என்ற தகவல் வந்து கொண்டிருந்தது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2021ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடிகையாக ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தளபதி விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் எதற்காக தமிழ் சினிமாவில் ராஷ்மிகா அறிமுகமானார் என்று குழப்பத்தில் சுத்தி வருகின்றனர் ரசிகர்கள். பெரியதாக தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தெலுங்கில் இவருகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதுவரை இவர் நடித்த படம் தோல்வியோ வெற்றியோ எதுவாக இருந்தாலும் நடிகர்களை மட்டுமே விமர்சித்துள்ளனர். நடிகை குறித்து எந்த விமர்சனமும் பெறவில்லை.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் நடித்ததும் தெரியவில்லை என்ற அளவுக்கு விமர்சனம் பெற்றது. அதற்கு அடுத்ததாக விஜயுடன் வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் வெற்றி கனியை பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படம் கலவையான விமர்சனம் பெற்றதால் தமிழே வேண்டும் என ஒதுங்கி மீண்டும் அவரது மொழியிலே ஆர்வம் செலுத்தி வந்தார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொள்வதாக சில தகவல்கள் வந்தன, அதோடு இருவரும் ஒன்றாக சேர்ந்து மதத்தீவு சென்று வருகிறன்றனர். இருவருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார் என்ற தகவல் இணையத்திலும், செய்திகளிலும் வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அளித்திருக்கும் பேட்டியில் "பிப்ரவரி மாதத்தில் நான் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்துகொள்ளப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்திகளை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கையோடு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மீடியாக்கள் இருக்கின்றன" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதற்கு இணையத்தில் பரவாயில்லை இப்போதாவது சொன்னிங்களே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.