24 special

ஒரே ஒரு வீடியோ உலக அளவில் விற்று தீர்ந்த இந்திய சாக்லேட் இந்திய சாக்லெட்டை உலக ட்ரெண்டாக்கிய மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

PMMODI,GIORGIA MELONI
PMMODI,GIORGIA MELONI

சாதாரணமாக இந்திய கடைகளில் ஒரு ரூபாய்க்கு வாங்கி சாப்பிடப்படும் Parle Melody என்ற மிட்டாய், இன்று உலக அரங்கில் பேசப்படும் பெயராக மாறியிருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் சக்தி நரேந்திர மோடியின் உலக செல்வாக்கு தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் பேருந்து பயணிகள் வரை ஒருகாலத்தில் பாக்கெட்டில் வைத்து சாப்பிட்ட மிட்டாய். ஆனால் நேற்று வரை உலகம் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இன்று அந்த Melody பற்றி அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை கூகுளில் தேடப்படுகிறது என்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; இந்தியாவின் மென்மையான சக்தியின் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியாவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தது எந்த விலையுயர்ந்த வைரமோ, அரிய பொக்கிஷமோ இல்லை. ஒரு சாதாரண இந்திய மிட்டாய். ஆனால் அதில் இருந்தது இந்திய உணர்வு. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் சுவை. அதைத்தான் மோடி உலக தலைவரின் கைகளில் வைத்து உலக மேடையில் காட்டினார். அதற்கு பிறகு மெலோனி தனது சமூக வலைதளத்தில் “மோடி எங்களுக்கு ஒரு சிறந்த இந்திய மிட்டாயை கொண்டு வந்துள்ளார்; அதுதான் Melody” என்று வீடியோ வெளியிட்டதும் உலக இணையமே வெடித்தது. சில நிமிடங்களில் கோடிக்கணக்கான பார்வைகள். சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங். கூகுளில் Melody பற்றிய தேடல்கள் திடீர் உயர்வு. உலக மக்கள் “இந்தியர்கள் இவ்வளவு விரும்பி சாப்பிடும் மிட்டாயில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் தேடத் தொடங்கினர்.

இதுதான் மோடியின் தனித்துவம். உலக அரங்கில் இந்தியாவை அவர் வெறும் அரசியல் சக்தியாக மட்டும் காட்டவில்லை; கலாச்சாரம், உணவு, பாரம்பரியம், சாதாரண மக்களின் உணர்வு என முழு இந்திய ஆன்மாவையும் உலகத்திற்கு கொண்டு செல்கிறார். பட்டுச் சேலைகள், காஷ்மீர் சால்வைகள், கைவினைப் பொருட்கள், யோகா, ஆயுர்வேதம், இந்திய உணவுகள் என பலவற்றை உலக அளவில் பிரபலப்படுத்தியவர் மோடி. ஆனால் இந்த முறை அவர் செய்தது இன்னும் வித்தியாசமானது. உலக தரத்தில் விளம்பரங்கள் செய்து கூட கிடைக்காத கவனத்தை, ஒரு ரூபாய் மிட்டாய்க்கு இலவசமாக பெற்றுத்தந்துள்ளார்.

இதுதான் உண்மையான பிராண்ட் இந்தியா. பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் உலக சந்தையில் கவனம் பெற போராடும் காலத்தில், மோடி ஒரே ஒரு பரிசு மூலம் இந்திய தயாரிப்பின் மீது உலகத்தின் கண்களை திருப்பியிருக்கிறார். இதை வெறும் சாக்லேட் பரிமாற்றமாகப் பார்க்க முடியாது. இது ஒரு மிக நுட்பமான இராஜதந்திரம். கடினமான அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே மனிதநேயம், நகைச்சுவை, கலாச்சார நெருக்கம் ஆகியவற்றை கொண்டு வந்து உறவை வலுப்படுத்தும் மோடியின் திறமை மீண்டும் உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.