ஜார்கண்டில் முத்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் என்பவர் முதல்வராக ஆட்சி புரிந்தார். இவர் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக விற்று அதன் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்டு சொத்தை வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாடியது. ஆனால் முதல்வர் சோரன் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். இதனை அடுத்து இது குறித்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோரனுக்கு அனுப்பிய 8 சம்மனை நிராகரித்ததாகவும் பதில் அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு டெல்லியில் உள்ள முதல்வரான சோரன் இல்லத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த வாரத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை! இதனை அடுத்து முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சட்டவிரோதமான மற்றும் கணக்கில் வராத 3.6 மில்லியன் ரூபாய் ரொக்கத்தையும் பிஎம்டபிள்யூ காரையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து முதல்வர் சோரனை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்ட பொழுது அதற்கு அடுத்த நாள் ராஞ்சியில் சோரன் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராஞ்சியில் உள்ள முதல்வர் சோரனின் இல்லம் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் முதல்வர் சோரன் தனது ராஜினாமா ஆளுநரிடம் சமர்ப்பித்து இதற்கு அடுத்த முதல்வராக சம்பாய் சோரனை அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதனை அடுத்து சம்பாய் முதல்வராக பொறுப்பேற்கப்பட்டார், ஹேமந்த் சோரன் ஆட்சியின் பொழுது போக்குவரத்துறை அமைச்சராக இருந்து சம்பாய்சோரன் ஜார்கண்டின் புதிய முதல்வராக பதவியேற்றார். இதனை அடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பானது இதோடு தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின், மாண்புமிகு ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் ஜேஎம்எம் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் அப்பட்டமான காட்சியாகும். புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது புதிய குறை நிலை! இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது என்று எனது சமூகம் இணையத்தில் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஜே.எம்.எம்.ஜார்கண்ட் தலைவரும் நமது இந்திய கூட்டணியின் முக்கிய கூட்டாளியுமான திரு ஹேமந்த்சோரன் ஜேஎம்எம் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், ஆர்வமுள்ள பாசிஸ்டுகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து கொடூரமான வழிகளையும் முயற்சிகளையும் பயன்படுத்துகின்றனர்.பாசிஸ்டுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நமது தேசத்தின் குடிமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் உறுதியாக செயல்பட்டு பாசிஸ்டுகளை தூக்கி எறிவார்கள் என்று பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது, இப்படி ஜார்கண்டின் முதல்வராக இருப்பவரை அமலாக்கத்துறை விசாரணை செய்தது மட்டுமின்றி அவர் கைது செய்யும் அளவிற்கு அதிகாரம் படைத்துள்ளது என்ற தகவல் தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியின் மத்தியிலும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திமுக அரசுக்கும் இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார் இந்த நேரத்தில் ஜார்கண்ட் முதல்வரையே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது ஏற்கனவே நம் மாநிலத்தில் முக்கிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள் அமலாக்கத்துறைக்கு இதுபோன்ற அதிகாரம் இருக்கிறது என்பது தெரியாமல் போயிடுச்சே என்று புலம்பி வருகின்றனர்.