கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தனித்தே தேர்தலை எதிர்கொண்டு வரும் ஒரு முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்கி வருகிறது இதற்கு மிக முக்கிய காரணமாகவும் நாம் தமிழர் கட்சியின் பெரிய தூணாகவும் இருப்பவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான். இவர் தமிழ் திரையுலகின் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தவர் இதற்கு பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் சீமான் தற்போது தேர்தல் வேலைகளை பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் இருப்பினும் இவர் குறித்த சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. அதாவது தங்களது youtube சேனலில் துப்பாக்கி தயாரிப்பது குறித்த வீடியோ வெளியிட்டதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய திறனாய்வு முகமே வழக்கு பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளுக்கு தேசிய புலானாய்வு முகமை சம்மன் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது ஆனால் என் ஐ ஏ அனுப்பிய சம்மனை ரத்து செய்யும்படி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து இந்த மனு மீதான வழக்கு அவசர வழக்காக எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தரர் மோகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கர் மற்றும் சேவியர் பெலிக்ஸ், காலையில் கட்சி நிர்வாகிகளுக்கு சம்மனை அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராகும் படியும் வெளியூரில் இருக்கும் நிர்வாகிக்கும் உடனடியாக சம்மனை அனுப்பிவிட்டு இப்பொழுதே ஆஜராக வேண்டும் என்று என் ஐ ஏ கூறுகிறது இது சட்ட விதி மீரல்கள் என்றும் அதனால் இரண்டு சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இவருக்கு அடுத்தபடியாக என் ஐ ஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் சுந்தரேசன் மனுதாரர் ஆஜராகுவதற்கு பிப்ரவரி 5ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கிறோம் என்று கூறி அதே நேரத்தில் கைது நடவடிக்கை எதுவும் நடைபெறாது அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் இரு தரப்பு வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இதனையே தீர்ப்பாக எழுதி வழக்கு முடித்து வைத்தனர். இந்த திடீர் என் ஐ ஏ சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கை நாம் தமிழர் கட்சியின் முழுவதுமே ஒரு அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில், திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் மற்றும் யூடியூபரான சாட்டை துரைமுருகனுக்கு தடை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அமைப்பில் இருந்து பணம் வருவது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகனைத் தவிர மற்றுமொரு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் தென்னகம் விஷ்ணுவையும் என்ஐஏ தேடி வருவதாக பதிவிட்டுள்ளார். இப்படி யூட்யூபில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வீடியோ வெளியிட்டதற்காகவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தேசிய திறனாய்வு முகமை ஆஜராக சம்மன் அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து அதுவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து வரும் நிதி குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை இருவருக்கும் சமமன் அனுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த NIA வேட்டை நாம் தமிழரின் வேரை கண்டறிந்ததாகவும் விரைவில் இதுகுறித்த பகீர் தகவல்கள் விரைவில் வெளியாகும் என விஷயங்கள் கசிகிறது.