24 special

லெப்டில் ஆர் எஸ் பாரதியை அசால்ட்டாக டீல் செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்....!

Rs bharathi,anand venkatesh
Rs bharathi,anand venkatesh

கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிற்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கும் எதிராக சொத்து குவிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த இரண்டு அமைச்சர்களும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும், அமைச்சர் ராமச்சந்திரனின் மனைவி மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இதனை அடுத்து கீழமை நீதிமன்றம் இந்த இரண்டு நீதிபதிகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்று அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியையும் விடுதலை செய்தது. இதற்குப் பிறகு தற்பொழுது கீழமை நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது அதனை அடிக்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கும் படி தெரிவித்துள்ளார். 

அதன்படி இந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது, அந்த விசாரணையில் இரண்டு அமைச்சர்களை விடுதலை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், அதனால் இந்த தவறை அனுமதிக்க முடியாது நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருந்தால் அதன் கடமையை செய்ய தவறி விட்டது போல் ஆகிவிடும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தது திமுக தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே இந்த ஆட்சியில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு விசாரணைக்கு செல்வது சிறையில் அடைக்கப்படுவது என்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் முடிக்கப்பட்ட ஒரு கேசை ஒரு நீதிபதி மீண்டும் கையில் எடுத்து விசாரணைக் உட்படுத்தி உள்ளார் என்ற செய்தி அறிவாலய வட்டாரத்தை பரபரப்பாகியது! இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இந்த வழக்கை மறுபடியும் கையில் எடுத்தது பற்றிய கேள்விக்கு நீதிமன்றங்கள் மீது திமுகவின் தலைவர் கலைஞர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கு மறுபடியும் நீதிபதி கையில் எடுத்துள்ளார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் செய்த குற்றத்தை அவர் பார்க்கவில்லை! இதே நீதிபதி தான் கூட்டத்தில் நான் ஒரு முறை பேசிய விவகாரத்தை கையில் எடுத்து அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார் ஆனால் நான் அந்த வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்து அவ்வழக்கிலிருந்து விடுதலை பெற்றேன் என்று தெரிவித்தார்,  

இதற்கு பிறகு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்த்து மூன்று நாட்கள் நீதிபதி தூக்கம் வரவில்லை என்று கூறுகிறாரே அதற்கு தங்கள் கருத்து என்ன என்று கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது அதற்கு உடனடியாக ஆர்எஸ் பாரதி எனக்கு கூட தான் நீதிபதி தற்போது வெளியிட்ட தீர்ப்பை பார்த்து ஏழு நாட்கள் தூக்கம் வரவில்லை. கலைஞருடைய பராசக்தி படத்தில் வருகின்ற நெஞ்சு பொறுப்பதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதர்களை பார்க்கையிலே என்ற பாட்டைக் கேட்ட பிறகு உடனே தூக்கம் வருகிறது, தூக்கம் வரவில்லை என்றால் நோய் என்று மருத்துவரை நான் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேற்கொண்டு உள்ள நடவடிக்கை பற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஆர் எஸ் பாரதியின் இந்த கருத்து கண்டிக்கத்தக்கது இதனால் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி இருந்தார், வழக்கறிஞரின் இந்த கருத்திற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்றத்தின் அவமதிப்பு வழக்கு தொடர விரும்பவில்லை என்றும் என் கடமையைத்தான் செய்துள்ளேன், அதனால் இதைப் பற்றி பொது வாழ்வில் உள்ளவர்கள் கூறுவதை கருத்தில் கொண்டு கவலைப்படவில்லை என்று தெரிவித்து ஆர் எஸ் பாரதிக்கு கூறிய கருத்தை சற்றே கவலைப்படாமல் ஒதுக்கிவிட்டுள்ளார். இதனால் அறிவாலய தரப்பு என்ன மதிக்கமாட்டேன் என்கிறார் என கவலையில் இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.....