இந்திய திருநாட்டில் எதிர்க் கட்சியினரும் ஆளும் கட்சியினரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். சில மாதங்களாகவே தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் திமுக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ் ஆம் ஆத்மி போன்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தேர்தல் களத்தில் சந்திப்பதற்கு தயாராகிக் கொண்டு வருகின்றனர் இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் திட்டங்களை வகுத்த நிலையில் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் வைக்கப்பட்டது.
மேலும் எதிர்க் கட்சிகளின் மூன்றாவது கூட்டம் இந்த மாத இறுதியில் பூனாவில் நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு கூட்டங்கள் முடிந்து மூன்றாவது கூட்டம் வருவதற்குள்ளே எதிர்க்கட்சி கூட்டணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது எதிர்க்கட்சிக் கூட்டணிகள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் தேர்தல் வருவதற்குள் எதிர்க்கட்சி கூட்டணி இருக்குமா இருக்காதா என்று கேள்வியை அரசியல் வல்லுனர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் எதிர்க்கட்சி கூட்டணியில் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் வரிசையாக நழுவிக் கொண்டு வருவது எதிர் கட்சி கூட்டணிக்கு தற்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுஇதற்கிடையில் சரத் பவார் வேறு இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது காரணம் பாஜகவை சேர்ந்த அஜித் பவாருடன் அவர் அவ்வப்போது பேசி தொடர்பில் இருப்பது இந்தியா கூட்டணியை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்தியா கூட்டணியில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகிக் கொண்டு வருகிறது மேலும் இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் ஆன சந்தீப் பதாக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகாரியில் உள்ள கிராமங்களை குறிவைத்து தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தல ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பட்சத்தில் வாக்கு வங்கி பிரிவதற்கு வாய்ப்புள்ளதால் அது பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற பேச்சு ஒரு பக்கம் எழுந்துள்ளது
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பீகார் மாநிலத்தில் போட்டியிடப் போவதாக கூறியது தற்போது மேலும் எதிர்கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி என போன மாதம் பேசிவிட்டு இந்த மாதம் பாஜக வெற்றிபெற சாதகமாக அரவிந்த் கெஜ்ஜரிவால் முடிவெடுத்திருப்பது இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களுக்கு இதுவும் போச்சா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... மேலும் அரவிந்த் கெஜ்ஜரிவால் நம்ம ஆளா இல்லை பாஜக வைத்த ஆளா என இப்பொழுதே சில கூட்டணி கட்சியில் பேச்சு அடிபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.. இப்படி தொடர்ந்து இந்திய கூட்டணி ஒரு பிடி இல்லாமல் சறுக்கிக் கொண்டு வருவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை விட வெறும் ஏமாற்றத்தை இந்தியா கூட்டணிக்கு ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்களால் பேசப்பட்டும் வருகிறது