தமிழ்நாட்டில் பல இடங்களில் மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த சிவபெருமானின் கோவில்கள் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு என்றே பஞ்சபூதங்களில் தலங்கள் தனித்தனியாக பல இடங்களில் அமைந்துள்ளது. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய கோவில்களில் பாதிக்கும் மேல் அதிகமாக உள்ள கோவில்கள் என்னவென்று பார்த்தால் அது சிவன் கோவில் ஆகவே தான் உள்ளது. எங்கே பார்த்தாலும் சிவன் எதையும் பார்த்தாலும் சிவன் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு சிவன் கோவில் இருந்து கொண்டு தான் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த உலகில் பூமிக்கு கீழ் தோண்ட தோண்ட ஏதாவது ஒரு சிவலிங்கம் கிடைத்துக் கொண்டுதான் உள்ளது.
இதில் சிவன் சிலைகளும், விக்ரகங்களும், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் தான் அதிகமாக கண்டெடுக்கப்படுகிறது. உலகத்தில் தோன்றியவன் முதலில் நானே என்று சிவபெருமான் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஜோதி ஒளியை உருவமாக கொண்டு காட்சி அளித்த சிவபெருமான் எழுந்தருளிய கோவைகளை சென்று பார்ப்பதற்கு கோடி பக்தர்கள் காத்திருக்கின்றார்கள். சிவபெருமானை வழிபட்டால் நிறைய சோதனைகள் நமக்கு ஏற்பட்டாலும் கூட முடிவில் அது நன்மையிலேயே முடியும் என்று நம் முன்னோர்கள் பலர் கூறி இருப்பதை நாம் அறிந்திருப்போம். ஒருமுறை சிவபெருமானை மனதார வழிபட ஆரம்பித்து விட்டால் சிவன் எப்போதும் அவர்களை கைவிடுவதில்லை என்பது இங்கு பலரின் நம்பிக்கையாகவே உள்ளது. அதில் ஒரே நாளில் எல்லா கோவிலுக்கும் அனைவராலும் செல்ல முடியாது.ஆனால் ஒரு ஆலயத்திற்கு சென்று அவன் அருள் பெற்றால் மோட்சம் கிட்டும் என்னும் நம்பிக்கை என்றும் நம் மனதில் உள்ளது. உலகில் பல இடங்களில் இருக்கும் சிவன் கோவில்களில் சில மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பல உள்ளது.
மேலும் அந்தக் கோவில்களுக்கு அதிக அளவில் பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆனால் இன்னும் சில கோவில்கள் சிவபெருமானுக்கென்றே இருப்பது வெளியில் தெரியாமல் மறைந்து கிடக்கின்றது. காலப்போக்கில் இது போன்று மருந்து கிடைக்கும் சிவன் கோவில்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது பல இடங்களில் பார்க்க முடிகிறது. தற்போது இது போன்ற ஒரு சிவன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் ஒருவர் தன் தூரத்திலிருந்து வரும் பொழுது இருப்பவர்கள் இந்தப் பக்கம் போனால் சிவலிங்கம் ஒன்று வரும் என்று கூறினார்களாம். அதை நோக்கி போய் பார்த்தால் ஆறடி உயரத்தில் மிகவும் பெரிய அளவில் ஆன சிவலிங்கம் ஒன்று அங்கு அமைந்துள்ளது என்று கூறுகிறார். மேலும் இங்கு அமைந்திருக்கும் சிவனை அங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்பது தெரிய வருகிறது இதனை பார்க்கும் பொழுது கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார்.
மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களை மீட்டெடுத்து வைக்கின்றனர். ஆனால் அவ்வாறு மீட்டெடுக்கும் சிவலிங்கங்கள் மிகவும் சிறிய அளவில் தான் பார்த்திருக்கின்றேன் ஆனால் இந்த சிவலிங்கமும் ஆறடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது என்பதை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது என்று கூறுகிறார். மேலும் பழங்காலத்தில் எட்டு கால பூஜைகள் நடத்தப்பட்டு வந்திருக்கும் ஆனால் இன்றைய காலத்தில் நாலு வேலை, ஒருவேளை பூஜைகள் கூட சரியாக நடக்கிறதா என்று தெரியவில்லை. நான் எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பதைப் போல இல்லாமல் நந்தி சிவனுக்கு பின்புறமாக அமைந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த கோவிலினை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு இந்த சிவளுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார், மேலும் இதுபோன்ற சிவன் கோவில்கள் கவனிக்கப்படாமல் இருப்பதால்தான் சிவனின் கோபம் அதிகமாகிறது எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது...