திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசிய கருத்து இன்று அக்கட்சிக்கு எதிராக அதிலும் குறிப்பாக தமிழகத்தை நிர்வாக வசதிக்காக பிரிக்கவேண்டும் என்ற புதிய விவாதத்தை உண்டாக்கும் வகையில் மாறியுள்ளது, இதில் புதிதாக கருத்து சொல்லி சிக்கி இருக்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாளையங்கோட்டை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது: "திமுக நாடாளுமன்ற உறுப்பினர், தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கிறார். அவர் தனி ஆளாகத்தான் நின்று கேட்கிறார்.
ஆ.ராசாவுக்கு இருக்கும் ஆசை நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்.நானும் கேட்பேன், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டுமென்று. 234 தொகுதிகள் இருக்கு. அதை 117, 117 ஆக பிரிப்போம். நாங்களும் முதல்வர்களாக இரண்டு இடங்களிலும் வந்துவிடுவோம். தமிழகத்தின் தென் பகுதியிலும் முதல்வராக வருவோம். வட பகுதியிலும் முதல்வராக வருவோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து வந்துவிடுவோம், பாண்டிய நாடு, பல்லவ நாடு.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்காதீர்கள். இரண்டு 117 தொகுதிகளிலும் பாஜக ஆட்சிக்கு வரும், அல்லது எங்களது கூட்டணிக் கட்சியினர் முதல்வராக வருவர். அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும்" என்று நயினார் கூறினார்.
இந்த கருத்திற்கு ஜோதிமணி பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான். அப்படிப் பிரித்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது .அந்த வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச்சொல்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இதைத்தான் தற்போது கடுமையாக பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை பிரித்தது யார்? காங்கிரஸ் கட்சிதானே சரி தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்றதும் வாய் திறந்த ஜோதிமணி, திமுகவை சேர்ந்த ஆ.ராசா தனி தமிழ்நாடு என பேசிய போது கண்டிக்காதது ஏன்? இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை வைத்து கொண்டு தமிழகத்தில் திமுகவின் எடுபிடியாக செயல்படுவதே இந்த காங்கிரஸ் கட்சியினர் வேலையாக போய்விட்டதாக ஜோதிமணியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒரு புறம் என்றால் வடிவேல் ஒரு படத்தில் இதற்கு மட்டும் கத்துதா அந்த பல்லி என்று தெரிவித்து இருப்பார், அந்த வசனத்தை பயன்படுத்தி தனி தமிழ்நாடு கேட்ட போது வாய் திறக்காத ஜோதிமணி, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் கத்துவது ஏன் என ஒப்பிட்டு மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.