24 special

காளி பட போஸ்டர் சர்ச்சை..! தயாரிப்பாளர் மீது எப்.ஐ.ஆர்..!

Kaali,  leena
Kaali, leena

உத்திரபிரதேசம் : தங்களை ஒரு லிபரலாகவும் கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொள்ள இந்தியாவின் பெரும்பான்மை மதத்தினரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தியும் அவர்கள் வழிபடும் தெய்வங்களை ஆபாசமாக சித்தரித்தும் கருத்து அல்லது புகைப்படங்களை வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்திக்கொள்வது ஒரு மனநோயாயாக மாறிவிட்டது என நெட்டிசன்கள் பலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.


இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த தயாரிப்பாளர் லீனா மணிமேகலை என்பவர் தனது தயாரிப்பில் உருவாகும் காளி எனும் திரைப்படத்திற்கு ஒரு சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த போஸ்டரில் ஹிந்து தெய்வமான காளிமாதாவின் தோற்றம் போன்று ஒப்பனை செய்யப்பட பெண் ஒருவர் புகைபிடிப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தங்களது படைப்பை பிரபலப்படுத்த பல வழிகள் இருக்கையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை கொச்சைப்படுத்தி அவரது செயல்பாடுகள் இருப்பது அவரின் பிறழ் மனநிலையை குறிக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் வேத் பிரகாஷ் சுக்லாவின் புகாரின் அடிப்படையில் லக்னோவில் அமைந்துள்ள ஹஸ்ரத்கன்ச் காவல்நிலையத்தில் லீனா மணிமேகலை மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. சுக்லா கொடுத்துள்ள புகாரில் " சமூக ஊடகங்களில் படத்தின் போஸ்டர் அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது. ஒருகுறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

ஹஸ்ரத்கன்ச் காவல்நிலைய SHO அகிலேஷ் மிஷ்ரா செய்தியாளர்களிடம்  " புகார்தாரரின் புகாரின் அடிப்படையில் லீனா மட்டுமல்லாமல் கதாசிரியர் ஷ்ரவன் மற்றும் தயாரிப்பாளர் ஆஷா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மத உணர்வுகளை வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது,

வெவ்வேறு மதக்குழுக்களிடையே பகைமையை விளைவித்தல் ஆகிய குட்ரஸ்ட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஐபிசி வழக்குகள் பதியப்பட்டுள்ளன" என தெரிவித்தார். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டோரோண்டாவை சேர்ந்த லீனா அந்த படத்தின் போஸ்டரை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

மத்திய வெளியுறவத்துறை அமைச்சகம் இதை உடனடியாக தடை செய்யுமாறு கனடாவிற்கு எடுத்துக்கூறியுள்ளதுடன் தனது கண்டனங்களையும் வலுவாக பதிவுசெய்துள்ளது.