திருச்சி திமுகவில் அமைச்சர் கே என் நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு இடையே நடக்கும் அதிகார போட்டி என்பது திமுகவை கடந்து தமிழகமே அறிந்த ஒன்று அப்படி இருக்கையில் சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேசை வாழ்த்தி பேசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசி இருக்கிறார் நேரு.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது, சமீபத்தில் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக திமுக அரசே அதிர்ந்த நிலையில் அதனை மையமாக கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி ,திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் நகர்புர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுவையில் பள்ளிக்கல்வித்துறையை மிக நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் தம்பி மகேஸ்க்கு வாழ்த்துக்கள். ஒரு இலாகா வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இலாகாவை நடத்துவதில் அமைச்சர் திறமை இல்லை என்றால் வெற்றி பெற முடியாது . அமைச்சர் மகேஸ் திறமையாக நேர்த்தியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.நாங்க எல்லாம் ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் ஆசிரியர்களின் வாக்குகள்தான் என்பது எங்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் நான் இங்கே கூறினால் பேப்பர் காரர்கள் எல்லாத்தையும் எழுதி விடுவார்கள். கண்டிப்பாக உங்கள் உழைப்பு வீண் போகாது தலைவர் முதல்வர் உங்களுடன் எப்போதும் இருப்பார்.
திமுகவும் தமிழக அரசும் என்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்களை மதிப்பவர்கள் தான் என்றும் வளரும் முடியும். எங்களை நம்பி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர் மகிழ்ச்சி. நான்கு நாட்களாக தம்பி மகேஸ் முகத்தில் சிரிப்பு கூட ஏற்படவில்லை. முதல்வர் உடன் காரில் சென்ற போது கூட இறுதியாக ஒரு சங்கம் போராட்டத்தை கைவிட்டது என்று சொன்ன பொழுது காரிலேயே குதித்தார். முதல்வரிடம் சொன்ன பொழுது வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம் அதை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார் என்றார்.கண்டிப்பாக வாக்குறுதிகளை தம்பி மகேஸ் முதல்வரிடம் கூறி நிறைவேற்றி தருவார் என நேரு குறிப்பிட்டார். நேரு இப்படி பேச திமுகவில் அடுத்த புயல் அடித்து இருக்கிறது ஆசிரியர்களின் கோரிக்கையை இப்போது நிறைவேற்ற முடியாது என்பதும் அதற்கு தேவையான நிதி ஆதாரம் இல்லை எனவும் நன்கு தெரிந்த நிலையில் நேரு முதல்வர் ஸ்டாலின் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என தெரிவித்து இருப்பதே தவறு.
பள்ளி கல்வி துறை மீது தினமும் பல்வேறு புகார்கள் வெளிவந்த வண்ணம் இருக்கையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது சமீபத்தில் போராடிய ஆசிரியர்கள் அமைச்சர் அன்பில் மகேசை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் பள்ளி கல்வி துறையை அன்பில் சிறப்பாக கையாளுகிறார் என நேரு பேசியது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதற்கு சமம் என நேருவை நோக்கி விமர்சனம் அதிகரித்து வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு துறையை சாந்தவர்கள் பாஜகவிற்கு வாக்கு அளிக்கலாம் என பேசிவரும் நிலையில் நேருவின் பேச்சு திமுகவில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறது.