கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடிட்டர்கள் முன்னிலையில் பேசினார் அப்போது நீங்கள் நினைத்தால் பணத்தை பதுக்குபவர்களை பிடிக்க முடியும், தற்போது தொழில் நுட்பம் என்பது மிகவும் வளர்ந்து விட்டது ஏதாவது ஒரு க்ளூ கிடைத்தால் போதும் ஆக்டோபஸ் மாதிரி கைகள் கடைசி இடத்தில் இருப்பவர்கள் வரை சென்று பிடித்து விடுவோம் என எச்சரிக்கை கொடுத்து சென்றார்.நிலைமை இப்படி இருக்க தற்போது AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருமான வரித்துறை திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகனின் கடைசி தொடர்பு வரை கண்டுபிடித்து இருக்கிறதாம் சென்னையில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து இன்று காலை 8.30மணிக்கு இரண்டு கார்களில் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள வழக்கறிஞர் அண்ணாதுரை அலுவலகம், வீடு மற்றும் மகன் அருண்குமார் வீடு உதவியாளர் வீடு உள்ளிட்ட 4-இடங்களில் வருமான வரி துறையினர் சுமார் 7-மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
அருண்குமார் ஊட்டியில் ஹைலேண்ட் என்ற சொகுசு விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதிக்கு ஜெகத்ரட்சகனின் அக்காடு ஓட்டல் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒப்பந்தப்படி அருண்குமார் மாதம் 10 லட்சம் அக்காடு நிறுவனத்திற்கு பணம் வழங்கி வருகிறார்.இந்நிலையில் வருமான வரித்துறையினர் தாராபுரம் அனுமந்தபுரத்தில் உள்ள அண்ணாதுறையின் வீடு மற்றும் தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள அவரது அலுவலகம் இரண்டிலும் காலை 8:30 மணி முதல் மதியம் 3-மணி வரை சோதனை நடத்தினார்கள்.மேலும் அண்ணா துறையின் ஜூனியர் வழக்கறிஞர் ஆஷிக் பாஷாவின் வீடான குமரலிங்கத்திலும் வருமான துறையினர் சோதனை செய்தனர்.பின்னர் ஆஷிக்பாஷாவை அழைத்துக் கொண்டு அருண்குமாருக்கு சொந்தமான பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வீட்டிற்கு சென்றனர். மகாலிங்கபுரம் வீட்டில் வைத்து அருண்குமாரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அனைத்து இடங்களிலும்
சுமார் 7-மணிநேரம் துருவித் துருவி வருவான வரி துறையினர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.ரெய்டு தொடர்பாக எந்த விவரத்தையும் வெளியிட முடியாது என்று வருமானவரித்துறையினர் தெரிவித்துவிட்டனர் தாராபுரம், பொள்ளாச்சி பகுதியில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெகத் ரட்சகன் நிறுவனத்துடன் தொடர்புடைய 700 மேற்பட்டோர் பட்டியலை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டு பிடித்து இருக்கிறதாம் வருமான வரித்துறை.அன்றே மத்திய நிதி அமைச்சர் ஒரு பாயிண்ட் கிடைத்தால் ஆக்டோபஸ் மாதிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிடித்து விடுவோம் என சொல்லிய நிலையில் அதை ஜெகத் ரட்சகன் விஷயத்தில் சரியாக செயல்படுத்தி பல ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறதாம் வருமான வரித்துறை இனி பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.