24 special

கேபிஒய் பாலாவின் அடுத்த சம்பவம்... சுளீரென வந்த அந்த செய்தி....

kpy bala
kpy bala

தமிழ் பொழுதுபோக்கு துறையில் பிரபல தொலைக்காட்சி நடிகரான கேபிஒய் பாலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறமை மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தனது முதல் வெற்றியாக 2022 விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருத்தினை பெற்றார். மேலும் குக்கூ வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் திறன் மற்றும் தோற்றத்திற்காக புகழ்பெற்ற பாலா, நட்பு, தும்பா, காக்டெய்ல் மற்றும் ரிபீட் ஷூ போன்ற படங்களில் தோன்றியதன் மூலம் சினிமா உலகிலும் காலடி எடுத்து வைத்து பிரபலமானார்.   இவரின் இயற்பெயர் பாலன் ஆகாஷ் ஜெகநாதன். ஆனால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்ததால் இவரை பலரும் கே பி ஒய் பாலா என்றே அழைக்கிறார்கள்.எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது திறமையினால் மட்டுமே முன்னேறி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பல உதவிகளை செய்து வருகிறார் பாலா. முன்னணி நடிகர்கள் கூட செய்யாத உதவிகளை இவர் தனது உழைப்பில் வரும் பணத்தை செலவழித்து வருகிறார்.


அவரது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைத் தவிர, கேபிஒய் பாலா தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியதோடு தொண்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டு வருவதும் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அனகாபுத்தூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் நோக்கில் பாலா ஆட்டோ சேவையைத் தொடங்கினார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைவான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ஆட்டோக்கள் வழங்கி, மருத்துவ சேவை சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது.இதற்கிடையில் பாலா தொகுத்து வழங்கும் ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, கே பி ஒய் பாலா மக்களுக்கு செய்து வரும் சேவைகளை பாராட்டி ராகவா லாரன்ஸ் பாலாவுக்கு 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முன்னதாக 2023ல் ஈரோடு அருகே கடம்பூர் மலைவாழ் மக்களுக்கு பாலா இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். மேலும், தனது பிறந்தநாளில், முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

இப்படி அவர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு நான்கு ஆம்புலன்ஸ்களை தாராளமாக வழங்கினார். இதற்காக அவர் தனது வெளிநாட்டில் பங்கேற்ற நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருமானத்தை செலவழித்துள்ளார். அதுமட்டுமின்றி பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைக் கோராமல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நபர்களுக்கு உதவுவதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். நடப்பு ஆண்டில் தேவைப்படும் சமூகங்களுக்காக கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கான தனது லட்சியத் திட்டத்தை பாலா திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்வது மட்டுமின்றி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலா நிதியுதவியும் அளித்துள்ளார். மைச்சாங் சூறாவளி அனகுத்துபூர் பகுதியை கடுமையாக பாதித்த பிறகு, பாலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 1000 நன்கொடையாக வழங்கினார், இதற்காக அவர் தனது சேமிப்பில் இருந்த இரண்டு லட்சம் ரூபாயை செலவழித்தார். 

இப்படி கொரோனா காலகட்டத்தில் தன்னிடம் இருந்த மொத்த சேமிப்பையும் மக்களுக்காக உபயோகித்த கே பி ஒய் பாலாவிடம் சேமிப்புகள் பூஜ்ஜியத்தை அடைந்ததால் அடைந்ததால் உதவி செய்வதில் கொஞ்சம் நாள் விலகி இருக்க, தற்போது மீண்டும் மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்து தனது உதவும் கரங்களை நீட்டி உள்ளார் கேபிஒய் பாலா.பாலாவின் தன்னலமற்ற செயல்கள் உள்ளூர் சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன, மேலும் ஒரு பேட்டியில் பாலா தனது சேவைகளுக்கு வெளிச்சத்தைத் தேடுவதை விட தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கும் உண்மையான விருப்பத்தால் இந்த சேவை பணியில் ஈடுபடுவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இப்படி செலவு செய்தால் நாளைக்கு அம்போதான் விஜயகாந்தை பார்த்தீர்களா எனவும் விமர்சனம் வைக்கப்படுகிறது...