24 special

கனிமொழி அதிர்ச்சி தகவல்... சிபிஐ கையில் 2 ஜி வழக்கு வேகம் தொடங்கியது...

Kavitha,  kanimozhi
Kavitha, kanimozhi

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, புதுடில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 


புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், 2021ல் மதுபான கொள்கை மாற்றப்பட்டது.

இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்கள் இடையே சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கலால் துறையை கவனித்து வந்த புதுடில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

 டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், மதுபான தொழிலில் ஈடுபட்டுள்ள அமித் அரோரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஹைதராபாதைச் சேர்ந்த, 'இண்டோ ஸ்பிரிட்ஸ்' என்ற மதுபான ஆலையை நடத்தி வரும் அருண் ராமச்சந்திர பிள்ளை, ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளரும், சிசோடியாவுக்கு மிக நெருக்கமானவராகவும் உள்ள விஜய் நாயர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில், அமித் அரோரா கைது தொடர்பாக புதுடில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயர் இடம் பெற்றது. இவர், தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் நடத்திய விசாரணையில், கவிதாவுக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, கவிதாவின் முதலீடுகளை வைத்துத் தான், இண்டோ ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தையே நடத்தி வருவதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில், பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.அதில் புதுடில்லியில் மதுபான விற்பனையை பல்வேறு குழுக்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. மதுபான தயாரிப்பாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - சில்லரை விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும், 'கார்டெல்' என்று அழைக்கப்படும் இந்த குழுக்களில், 'சவுத் குரூப்' என்ற குழு மிக முக்கியமானது.

கவிதா, அருண் பிள்ளை, ஆந்திர எம்.பி., மகுண்டா ஸ்ரீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவா மகுண்டா, 'அரவிந்தோ பார்மா' நிறுவன உரிமையாளர் பி.சரத் சந்திர ரெட்டி. ஹைதராபாத் தொழிலதிபர் அபிஷேக் பொய்ன்பள்ளி, கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சி பாபு கொரன்டலா ஆகியோர் அடங்கிய குழு தான், 'சவுத் குரூப்' என்று அழைக்கப்படுகிறது.

புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதால், மொத்த விற்பனையாளர்களுக்கு கிடைத்த லாபத்தில் குறிப்பிட்ட சதவீதமாக, 100 கோடி ரூபாயை, ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாக இந்த, 'சவுத் குரூப்' கொடுத்துள்ளது.

இந்த பணத்தை, ஆம் ஆத்மியின் விஜய் நாயரிடம் இவர்கள் அளித்துள்ளனர்.இந்த தகவல்களை மற்றொரு குற்றவாளியான தினேஷ் அரோரா என்பவர் விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த 2021 செப்., முதல், புதுடில்லியின் நட்சத்திர ஹோட்டல்களில் பல்வேறு முறை சந்தித்து இந்த குழுவினர் உரையாடி உள்ளனர். இந்த சந்திப்புகளுக்கு பின், இண்டோ ஸ்பிரிட்ஸ் நிர்வாக இயக்குனர் சமீர் மகேந்த்ரு என்பவர், கவிதாவுக்கு அறிமுகமாகி உள்ளார். அருண் பிள்ளை வாயிலாக இந்த அறிமுகம் நடந்துள்ளது.

அவருடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கவிதா பேசினார். அப்போது புதுடில்லியில் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக, சமீருக்கு கவிதா வாழ்த்து தெரிவித்தார். எல்லாரும் இணைந்து தொழில் செய்வதில் மகிழ்ச்சி என சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

அதன்பின், 2022 துவக்கத்தில் கவிதாவின் ஹைதராபாத் இல்லத்தில், சமீரை சந்தித்து கவிதா பேசினார். இந்த சந்திப்பின் போது கவிதா மற்றும் சமீருடன், சரத் சந்திரா, அருண் பிள்ளை, அபிஷேக், கவிதாவின் கணவர் அனில் ஆகியோர் இருந்தனர்.

அப்போது, 'அருண் பிள்ளை என் குடும்ப உறுப்பினரை போன்றவர்; அவருடன் வியாபாரம் செய்வது என்னுடன் வியாபாரம் செய்வதை போன்றது. இதை பல்வேறு மாநிலங்களிலும் விரிவுபடுத்துவோம்' என, சமீரிடம் கவிதா கூறினார் என குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதாவை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது, கவிதா மற்றும் அருண் பிள்ளை ஆகியோரிடம் விசாரணை நடத்த, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

கவிதா இன்று விசாரணைக்கு ஆஜரானார். இப்படி தெலுங்கானா முதல்வர் மகளிற்கு எதிராக பிடி இறுகிவரும் வேலையில் இதே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, 2ஜி வழக்கை விரைவில் கையில் எடுக்க இருக்கிறதாம் ஏப்ரல் மாத இறுதிக்குள் 2 ஜி வழக்கு வேகம் எடுக்கும் என்பதால் கவிதாவிற்கு ஏற்பட்ட நிலை நமக்கும் ஏற்படுமோ என கடும் கலக்கத்தில் இருக்கிறாராம் கனிமொழி என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.