செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்வதையே தொழிலாக கொண்டு இருப்பவர் கே பி முனுசாமி, அதிமுகவை அளித்து ஒரு கட்சி அந்த இடத்தை புடிக்க நினைப்பதாகவும் அதற்கு திமுகவும் துணை போவதாக கடந்த சில மாதம் முன்பு பேசியவர் முனுசாமி.இன்று அப்படியே பல்டி அடித்து இருக்கிறார் முனுசாமி நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் முனுசாமி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உண்மையில் முனுசாமி பாஜகவில் ஏதும் இணைந்து விட்டாரா எனும் அளவிற்கு பிரதமரை உயர்த்தி பேசும் வகையில் அமைந்து இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்,தமிழகத்தில் உடனடியாக வரக்கூடிய தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் தான், நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான், எங்களை பொறுத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய திருநாட்டின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். பல்வேறு நிலைகளில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு இணையாக திகழ செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் பாஜக தனியா இருப்பார்களா? அதிமுக நாங்கள் தனியாக நிற்பார்களா? என எங்களுக்குள் இடைவெளியை நீங்கள் ஏற்படுத்தாதீர்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் தேசிய நலன் முக்கியம், அதன்படி யார் பிரதமராக வரவேண்டும் என நாங்கள் முடிவெடுத்து உள்ளோம். அதன்படி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என முடிவெடுத்து உள்ளோம். அதற்குள் சிறு சிறு சம்பவங்கள் நடப்பது என்பது. ஒரு ஜனநாயக நாடு பல்வேறு சிந்தனையில் உள்ளவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள் அப்படி இருப்பவர்கள் கருத்துக்கள் சொல்லும் பொழுது ஏற்க முடியாத சில கருத்துக்கள் சொல்வார்கள். அதற்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தால் அப்படியே இருக்க நிலை முடியும்.
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார், அவர் வாரிசு அரசியலை உருவாக்கவில்லை, அவருக்கு பின்னால் எம் ஜி ஆர், ஜெயலலிதா, வாரிசு அரசியலை உருவாக்கவில்லை, தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமியும், வாரிசு அரசியலை உருவாக்கவில்லை, கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு வாரிசை அறிமுகப்படுத்தினார்.
கருணாநிதி அவர்கள் கூட பரவாயில்லை, ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செல்லும்போது எல்லாம் அவரது சிந்தனை எல்லாம் தனது மகனை அமைச்சராக்க வேண்டும்,என ஆக்கியுள்ள அந்தக் கட்சி வாரிசு அரசியல் மட்டுமல்ல எங்களை அடிமைகள் என சொல்லி வருகின்றனர். ஆனால் முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலின், இன்று அந்தக் கட்சியின் தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்களையும், அடிமையாக வைத்துள்ளனர்.
திமுக அரசை அகற்ற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேபி முனுசாமி ஒரு ஆட்சி அகற்றப்பட வேண்டும் என ஒரு தலைவர் கூறுகிறார் என்றால் அந்த ஆட்சி எந்த அளவுக்கு மோசமான ஆட்சி என நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் என தெரிவித்தார் முனுசாமி.
பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்ற தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல் எங்களுக்கான தேர்தல் எனவே இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவோம் என தெரிவித்து வருவதுடன் கையை கட்டி கொண்டு சீட் பேரம் நடத்த மாட்டோம் நேரடியாக எங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம் என அழுத்தம் திருத்தமாக கூறிவந்த நிலையில் அண்ணாமலைக்கு எதிர்ப்பை பதிவு செய்தது அதிமுக.அதே நேரத்தில் தற்போது அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பில் இருந்து பின்வாங்கி பல்டி அடித்து இருப்பது கே பி முனுசாமி பேச்சின் மூலம் தெரியவந்து இருக்கிறது.