24 special

சத்தமில்லாமல் பல ஏழரை வேலைகள் செய்த அதிமுக கருப்பு ஆடுகள்...! அவ்வப்போது கசியும் சீக்ரெட்ஸ்...!

edapadi, annamalai
edapadi, annamalai

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணாதுரை பற்றி கருத்துக்களை முன் வைத்தார். இந்த விவகாரம் அதிமுக பாஜக கூட்டணி மத்தியில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் அளவிற்கு சென்றது. அண்ணாமலை கூறியது கண்டிக்கத் தகுந்தது அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி வி சண்முகம், செல்லூர் ராஜூ போன்றோர் கொந்தளித்து வந்தனர். ஆனால் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து தெரிவித்த வரலாறு அனைத்தும் உண்மை எனவும் அதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்றும் ஆதலால் இன்னும் அதிகமாக அண்ணா குறித்த வரலாற்றுகளை தெரிவிப்பேன் என்றும் நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.


இதனால் இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சச்சரவுகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களாக முன்வைக்கப்பட்டது, இதற்கிடையில் டெல்லி தலைமையிடம் அதிமுக தரப்பினர் அண்ணாமலையை அவரது பதவியில் இருந்து நீக்கினால் அதிமுக பாஜக கூட்டணி நிகழும் நீங்கள் கேட்ட தொகுதி பங்கீடு கொடுக்கப்படும் என்றும் கோரிக்கையை முன்வைக்க அதற்கு மறுப்பு தெரிவித்த டெல்லி தலைமையின் பதிலில் கூட்டணி நிகழாவிட்டாலும் பரவாயில்லை என்பது போன்ற வகையில் அமைந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஐந்து மூத்த தலைவர்கள் கொண்ட ஒரு குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக நேரம் கேட்டுவிட்டு டெல்லிக்கு பறந்தனர். சந்திக்க தானே வருகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும் அவர்களுக்கு நேரம் ஒதுக்க பிறகு தான் தெரிய வருகிறது இவர்கள் சாதாரணமாக சந்திக்க வரவில்லை அண்ணாமலை குறித்து புகார்களை தெரிவிக்கவும் அவர் மீது குறை சொல்லவும் தான் இந்த அப்பாயின்மென்ட் என்று, உடனே மத்திய உள் துறை அமைச்சர் தமிழகத்தின் மாநில தலைவராக நியமித்து அவரை தமிழகத்திற்கு சென்று பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் கூறி அனுப்பியவரே நான் தான் என்னிடமே வந்து அண்ணாமலை பற்றி குறை கூற வருகிறார்களா எந்த தைரியத்தில் வருகிறார்கள் என அமித்ஷா கோபமடைந்து பார்க்க மறுத்துள்ளார். 

இதன் காரணமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து வந்துள்ளனர். ஆனால் அதற்கான அப்பாயின்மென்டையும் தமிழக பாஜகவின் மகளிர் அணி தலைவராக உள்ள வானதி சீனிவாசன் தான் அப்பாயின்மென்ட் பெற்று தந்தார் எனவும் அதற்குப் பிறகுதான் பியூஸ் கோயலையும் சந்திக்க அதிமுக குழுவிற்கு அனுமதி கிடைத்தது என அதிமுக தரப்பினரும் சில அதிமுக தரப்பு செய்தியாளர்களும் தகவல்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தகவலும் தவறானது என்றும் பேச்சுவார்த்தைக்கு நான் ஏற்பாடு செய்ததாக தவறாக செய்திகள் பரப்பப்படுகிறது ஆனால் நான் கட்சியின் நிகழ்சிகளில் படு பிஸியாக இருந்தேன், எனக்கு எதுவும் தெரியாது பாஜக தலைமையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் டெல்லி வந்துள்ள விஷயமே இந்த தவறான செய்தி பரப்பப்படும் போது தான் எனக்கு தெரிய வந்தது என்று டெல்லியில் இருந்து திரும்பிய வானதி சீனிவாசன் எம் எல் ஏ விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பளிச்சென்று போட்டுடைத்துவிட்டார், இதிலும் அதிமுகவின் அரசியல் சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. 

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன, அண்ணாமலை யாத்திரை கிளம்பியதற்கு பிறகு தமிழக மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி என்றால் பாஜக தான் என நன்கு பதிந்துவிட்டது கணிசமான எம்.எல்.ஏ'களை வைத்தும் அதிமுக சரியாக செயல்படவில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டது இதனால் பாஜக வளர்ந்துவிடக்கூடாது அது நமக்கு அபாயம், நமக்கு திமுக இருந்தாலே போதும் பிழைப்பை ஓட்டிவிடலாம் என நினைக்கும் சில முன்னாள் அமைச்சர்களின் வேலைதான் என சில தகவல்கள் கசிந்துள்ளன. இதன் காரணமாகத்தான் அண்ணாமலை முன்பே இதனை யூகித்து நாம் தனியாக நின்றாலும் பரவாயில்லை என முடிவெடுத்தார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.