தமிழக மட்டுமின்றி நாடு முழுவதும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் எந்த தேர்தலிலும் கடந்த இரண்டு முறையை போன்று வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் பிரதமரை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவை எதிர்க்கும் நோக்கத்தோடு நாட்டில் உள்ள அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று இணைந்து INDI என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியின் ஆரம்ப கால நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவை எதிர்ப்பதாக இருந்தாலும் காலப்போக்கில் இந்த கூட்டணி தன் கூட்டணி கட்சிகளை தங்களிடமே தக்க வைத்துக் கொள்வதற்கு படாத பாடு பட்டு வருகிறது. அதாவது அமைச்ச உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்த்து பேசியது நாடு முழுவதும் எதிர்ப்பை பெற்றதையும் தாண்டி INDI கூட்டணியில் தோல்விக்கு வழிவகுத்தது. இதனால் INDI கூட்டணியின் கட்சிகளே திமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அதற்குப் பிறகு பல சமாதனங்கள் மேற்கொள்ளப்பட்டு திமுக இன்னும் அந்த கூட்டணியில் தன் பங்கை தக்கவைத்து வருகிறது. ஆனால் பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களை ஈர்த்து வருகிறது இதிலும் குறிப்பாக அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டதும் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றது. இதனால் வெறுப்படைந்த எதிர்க்கட்சி அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்ததோடு ராமர் குறித்த அவதூறான கருத்துக்களையும் பரப்பி வந்தனர் ஆனால் அதனை மக்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் திமுக தன் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் திமுகவின் முழு தேர்தல் வேலையை அமைச்சர் உதயநிதியே தலைமையேற்று கவனித்து வருகிறார். ஆனால் இந்த தேர்தல் வேலைகளில் திமுகவில் மாவட்ட வாரியாக நடக்கும் உட்கட்சி பூசல் மற்றும் மாவட்டங்களின் காணப்படும் எதிர்ப்புகள் பற்றிய பேசப்படுகிறது. அது மட்டும் இன்றி மதுரை, தர்மபுரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திமுக எம்பிக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கூடாது என அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளை அறிவாலயத்திடம் கோரிக்கை முன் வைத்திருப்பது திமுகவிற்குள் நடக்கும் உட்கட்சிப்பூசலை வெளிக்காட்டியது.
அதே சமயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மொத்தம் நான்கு தொகுதிகளை கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது, ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் பல தொகுதிகளில் திமுகவின் வேட்பாளர்களை நிறுத்துங்கள் என்றும் உட்கட்சி பூசலும் வலுவெடுத்துள்ளது திமுக தரப்பை பதட்டத்தில் இருக்க வைத்துள்ளது. இந்த நிலையில் திமுகவைப் போன்ற ஒரு பதட்ட நிலைக்கு காங்கிரஸ் தலைமையும் தள்ளப்பட்டுள்ளது. அதாவது சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என்றும் கட்சியிலிருந்து அவரை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். இதனால் காங்கிரஸ், நாம் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியும் பின்னடைவை சந்தித்துள்ளது உட்கட்சி பூசலை சந்தித்து வருகிறது இந்த நிலையில் தேசிய அளவில் நாம் அமைத்துள்ள கூட்டணியும் தற்போது பிளவு பட்டுள்ளதோடு சிவகங்கை நிர்வாகிகள் மத்தியில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக கார்த்திக் சிதம்பரத்தை கட்சியை விட்டு நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.