24 special

கட்சியை அறிவித்தார் ஓபிஎஸ்..!

Ops, Eps
Ops, Eps

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளது, தேசியளவில் தேர்தல் பொறுத்தவரை பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணிக்கு இடையேயான தேர்தல் என்றே சொல்லலாம். தமிழகத்தில் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளை செய்துவருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இல்லை குறித்து பேசியது தான் மொத்த கூட்டணி கட்சியையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


நாட்டில் இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுமையாக செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவுடன் இடையிலான போட்டி என்பதில் மாற்றமில்லை. பாஜக மட்டும் இதர கட்சிகள் திணைக்களது பெரும்பான்மையை காட்டும் விதத்தில் உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகிய அதிமுக இனி கூட்டணி இல்லை என்பதை முழுமையாக தெரிவித்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் முழுமையாக பாஜக கூட்டணியில் இருப்பதாக உறுதிபட கூறிவருகிறார். இந்நிலையில், அதிமுக சின்னம், லெட்டர்பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவதால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் பன்னீர்செல்வம் கட்சி சம்பந்தமாக ஏதும் பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுக வார்த்தையை தவிர வேறு ஏதும் பயன்படுத்துவது இல்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் தங்களது கட்சியை பலப்படுத்தும் விதத்தில் பொதுக்குழு கூட்டம், ஆலோசனை ஆகியவற்றை செய்துவருகிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வம் தலைமையில் திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பிறகு பேசிய ஓபிஎஸ், "இந்த லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப் போகிறார். தேர்தலுக்கு முன்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. மக்கள் தீர்ப்பு என்ன என்பது தேர்தலில் தெரியும். அதிமுக கொடி, சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. தொண்டர்கள் பயன்படுத்துக கூடாது என்ற உத்தரவு எங்கும் இல்லை. எங்கள் தொண்டர்களின் வேகமும் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.

எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம்.. இந்த ரத்தத்தை மாற்றத் தீர்ப்பு அளிக்க முடியுமா.. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தனித்து நிற்கும் ஐடியாவில் இல்லை. கூட்டணியாகக் களமிறங்கவே விரும்புகிறோம். நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குச் சிறப்பான ஒரு ஆட்சியைக் கொடுத்துள்ளார்கள். மீண்டும் அவரே நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்பதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருப்பதால் எங்களால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும் என கூறினார்.

அரசியல் விமர்சகர் கூறுகையில் அதிமுக முழுமையாக பன்னீர் செல்வம் பக்கம் வந்துவிடலாம், பாஜகவில் இருந்து விலகி தங்களது தலைமையில் திமுகவில் இருக்ககூடிய கட்சிகளை அழைத்து வந்துவிடலாம் என கணக்கு போட்டு எடப்பாடி பழனிச்சாமி திட்டம் போட்டார். ஆனால். திமுகவில் இருந்து தற்போது எந்த கட்சிகளும் விலகுவதாக தெரியவில்லை. இதனால் அதிமுக என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி  நிற்கிறது. மேலும், பாமக, தேமுதிக கட்சிகள் அதிமுக பக்கம் செல்லலாம் என் கூறப்பட்ட நிலையில், அவர்கள் பாஜக பக்கம் சென்றுவிடலாம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் விமர்சகளால் கூறப்படுகிறது. இது தொடக்கம் தான் தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சந்திக்க வேண்டியது என்பது நிறைய உள்ளது என கூறுகின்றனர். அதிமுக கொடி சிவிவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.