சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பிழம்பாக தோன்றிய முருகன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சூரபத்மனை அளிப்பதற்காக அவதாரம் எடுத்து எதிரிகளின் தொல்லை மற்றும் எதிரிகளால் செய்யப்பட்ட மாந்திரீகத்தை ஒழிக்க செய்யப்பட்ட ஹோமமே சத்ரு சம்ஹாரம் ஹோமம். தற்போது இந்த ஹோமத்தை வசதி படைத்தவர்களும் அரசியல் பிரமுகர்களும் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஏனென்றால் எதிர் சக்தியாக இருக்கும் எதிர்மறை வினையை அகற்ற பல அரசியல் பிரபலங்கள் இந்த ஹோமத்தை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் செய்து வருவார். அதன்படி தமிழக முதல்வரின் மருமகனான சபரீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனையில் சிக்கி பெரும் அவஸ்தைகளில் இருந்த பொழுது திருச்செந்தூர் சென்று திருச்செந்தூர் முருகனை வழிபட்டதோடு சத்ரு சம்ஹார ஹோமத்தை செய்தார். இந்த ஹோமம் செய்வதற்கு முன்பாக திமுகவில் அதிக செல்வாக்கையும் அரசியல் பின்புலத்தையும் சபரீசன் பெற்று இருந்தார் அதுமட்டுமின்றி 2021 ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய பின்னணியே சபரீசன் தான் என்றும் சபரீசன் முழு தேர்தலையும் கவனித்து திமுகவை வெற்றியடைய வைத்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால் இவர் நில பிரச்சனையில் இருக்கும் பொழுது திமுக சார்பில் எதுவும் செய்யப்படாமல் அந்த பிரச்சனையிலிருந்து விடுபட முருகனை நோக்கி வழிபட ஆரம்பித்தார், ஆனால் அந்த ஒரு வழிபாடு செய்த பிறகு சபரிசனுக்கு அடுக்கடுக்கான தோல்விகள் வர ஆரம்பித்தது. மேலும் தற்போது திமுக அரசியல் கட்சி மத்தியில் சபரீசன் செல்வாக்கு இல்லை! திமுகவில் சபரிசனின் அதிகாரம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சத்ரு சம்ஹார பூஜையை மேற்கொண்டு திருச்செந்தூர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி உள்ளார். மேலும் திமுக வருகின்ற தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவும் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளில் இருந்து விடுபடவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. எந்த ஒரு பூஜையால் எதிர்வினை எல்லாம் ஒழியும் என்று கூறப்பட்டதோ அதே பூஜையால் சபரீசன் தோல்வியை தழுவ ஆரம்பித்தார் இந்த நிலையில் தூத்துக்குடி அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் சத்ரு சம்ஹார ஹோமத்தை நடத்தி இருப்பது அவருக்கு எந்த வினையை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியில் பெய்த கனமழை இதுவரை தூத்துக்குடி கண்டிராத ஒரு கனமழை என்றும் அதே சமயத்தில் இதுவரை தூத்துக்குடி கண்டிராத பல பாதிப்புகளை கண்டதாகவும் கூறப்பட்டது. பல மக்கள் தங்களது உடைமை மற்றும் உறவினர்களை இழந்து தவித்தனர் உண்ண உணவும் நிவாரணப் பொருட்களும் இன்றி நிர்க்கதியாக விடப்பட்டனர், மேலும் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் ஏன் மழை பாதிப்பு நடந்த இடத்தில் இல்லை என்று கேள்வியும் மக்கள் மத்தியில் ஓங்கி இருந்தது. இதனால் பெரும் பின்னடைவுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சந்தித்துள்ளதால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு சாதகமான சூழல் தூத்துக்குடியின் நிலவாது என்ற பேச்சும் அடிபட்டு வருவது அப்பகுதி அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனின் தூக்கத்தை கெடுத்தது. இதனால் திருச்செந்தூர் சென்று சத்ரு சம்ஹார பூஜையில் செய்துள்ளார். ஆனால் சபரீசனுக்கு ஏற்பட்ட பின்னடைவை போன்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.