24 special

விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்ட கருணாஸ்!!! விசாரணையில் வெளிவரும் உண்மைகள்!!!

KARUNAS , AIRPORT
KARUNAS , AIRPORT

விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்ட கருணாஸ்!!! விசாரணையில் வெளிவரும் உண்மைகள்!!! திரைப்படங்களில் காமெடியனாகவும், சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகர் ஆகவும் சினிமாவில் சூப்பராக கலக்கி வந்தவர் தான் கருணாஸ்!! இவர் முதலில் காமெடி ரோல்களிலும், சைடு ரோல்களிலும் மட்டுமே நடித்து வந்த நிலையில் அதன் பிறகு திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த தொடங்கினார். இவ்வாறு பல துறைகளில் அசத்தி வந்த கருணாஸ் அதன் பிறகு தயாரிப்பாளராகவும் உருவெடுத்து படங்களை தயாரித்து வந்தார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பதவியேற்று சிறப்பாக பணியாற்றி வந்தார். 


அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை பகுதியில் அதிமுக சார்பாக மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார். அப்போது அந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே தேவர் அரசியல் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருமுறை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக செல்லும் பொழுது இவரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர் காலணியை வீசினார். இது அந்த சமயத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்தது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான தில்லுக்கு துட்டு, கா கா கா போ மற்றும் சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களில் சூப்பராக நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் கருணாஸ் போலீசாரிடம் மாட்டி விசாரணை நடத்தி உள்ளனர்!!! எதற்காக போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார் என்பது குறித்து விரிவாக காணலாம்.

கடந்த ஜூன் 2ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு திருச்சி செல்வதற்காக கருணாஸ் சென்று உள்ளார். விமான நிலையங்களில்  எப்போதும் போல அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு சோதனை மேற்கொண்ட பொழுது நடிகரும், எம்எல்ஏவும் ஆன கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த 40 துப்பாக்கி குண்டுகளும் அவர் வைத்திருந்த கை பைகளில் இரண்டு பாக்ஸ்களில் இருந்ததாகவும் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பொழுது  தன்னிடம் துப்பாக்கியின் லைசன்ஸ் இருப்பதாகவும், அதற்கான குண்டுகள் தான் இவை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

விமானங்களில் துப்பாக்கிகள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது தனக்கு தெரியும் என்றும், கிளம்பும் அவசரத்தில் பைகளில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என்றும் விசாரணையின் போது கருணாஸ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாசுக்கு விமானத்தில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து கருணாஸிடம்  விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்  விசாரணைகள் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இது குறித்த செய்திகள் தற்பொழுது வெளியானவுடன் இவர் ஏன் துப்பாக்கி குண்டுகளை வைத்துள்ளார்?? என்றும் கருணாஸ் எதற்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி வைத்துள்ளார் என பலரும் கேள்விகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் ஒரு ஒரு மாதிரியான கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.