தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளவர் தான் நடிகை அஞ்சலி!! ஆந்திராவில் பிறந்து தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி இன்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு ஜீவாவிற்கு ஜோடியாக கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அதன் பிறகு வெளியான அங்காடி தெரு இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.
மேலும் இதனை தொடர்ந்து எங்கேயும் எப்போதும் என் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக மிகவும் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து வெளியான அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிக அளவில் உருவாகினர். மேலும் கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினியாகவும் இவர் மாறிவிட்டார். வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அஞ்சலி தற்பொழுது கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் அரசியல் செல்வாக்கு உடையவரும் ஆன நந்தமுரி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் இவர்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது பாலகிருஷ்ணன் அஞ்சலியை தள்ளிவிட்டது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் குடித்திருந்ததால் தான் இது போன்று நடந்திருப்பார் எனவும் பலரும் கூறி வந்தனர். ஆனால் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகள் எழுந்து வந்த சமயத்தில் சமீபத்தில் அஞ்சலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணாவிற்கு நன்றியை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இருவரும் எப்பொழுதும் பரஸ்பரம் மரியாதை கொண்டுள்ளதாகவும் நீண்ட காலமாகவே இவர்கள் இருவரும் நட்புடன் இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது என பதிவிட்டு இருந்தார்.
என்னதான் அஞ்சலி இதுபோன்று பதிவுகளை செய்து வந்தாலும் கூட நெட்டிசன்கள் இந்த பதிவுக்கு பல மாதிரியான கமெண்ட்களை செய்து வருகின்றனர். பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் என்பதாலும் அரசியல்வாதி என்பதாலும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்பதாலும் இதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்பதாலும் அஞ்சலி இவ்வாறு பதிவிட்டு இருப்பார் என்று கமெண்ட்களை கூறி வருகின்றனர். மேலும் இந்தப் பதிவினை கட்டாயப்படுத்தி கூட போட வைத்திருப்பார்கள்!! நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும் என நெட்டிசன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மேலும் அஞ்சலி தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் காரணமாக பாலகிருஷ்ணாவை பாதுகாக்க நினைப்பதாகவும், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இருவரும் நட்பு உறவில் இருப்பதாகவும் கூறி இது போன்ற பதிவினை பதிவிட்டுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். தொடர்ந்து பாலகிருஷ்ணாவிற்கு எதிராக எழுந்த விமர்சனங்களை நிறுத்தும் வண்ணம் அஞ்சலி இது போன்ற பதிவினை செய்திருந்தாலும் கூட நெட்டிசன்கள் அந்த பதிவினை வைத்து பல கமெண்ட்களை இதுபோன்று பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.