அனல் பறக்கும் திருப்பங்கள் மற்றும் ஆட்டங்கள் நிறைந்த இடம் என்பது போர்க்களத்தையும் விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் இடத்தையும் கூறுவார்கள். அதற்கு அடுத்தபடியாக அரசியல் வட்டாரத்தையும் தற்போது கூறலாம். ஏனென்றால் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சி அமைத்து வந்த பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற முனைப்பில் தனது தேர்தல் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக செயல்படுத்தியது. தற்போது தேர்தலும் ஏறக்குறைய வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதியோடு முடிந்து ஜூன் 4 தேர்தல் முடிவுகளும் கிடைக்கப் போகிறது முன்னதாக மத்தியில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஏற்படுத்திய இண்டி கூட்டணியும் தற்போது எந்த ஒரு நிலையில் இருக்கிறது என்பதும் தெரியாமல் உள்ளது. ஆனால் இந்த இண்டி கூட்டணி பெருமளவிலான பின்னடைவுகளையே சமீப காலங்களாக சந்தித்து வருகிறது என்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.
மேலும் அரசியல் வட்டார முழுவதும் இன்றளவும் ஒரு கேள்விக்குறியாக ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது நம் நாடு இந்தியாவா அல்லது பாரதமா என்பதுதான்!! ஆனால் இந்தியாவின் மறு பெயர் தான் பாரதம் என்று அரசியலமைப்பு கூறுகிறது. இதன்படியே பல உலக மேடைகளில் இந்தியாவின் பெயரானது பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிர் தரப்பினர் முக்கியமாக காங்கிரஸ் மற்றும் திமுக போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். அதுமட்டுமின்றி வட இந்தியாவில் கூட இந்த பெயர் மாற்றத்திற்கான காணப்பட்ட எதிர்ப்பை விட தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தில் இந்தியாவை எப்படி பாரதம் என்று கூற முடியும் உங்கள் இஷ்டத்திற்கு பெயரை மாற்றுவீர்களா என பல எதிர்ப்புகள் இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அதற்கான எதிர்ப்பை திமுக தனது ஆதரவு youtube சேனலை நடத்துபவர்கள் மூலமும் வெளிப்படுத்தி வருகிறது.
அப்படி youtube சேனலின் தொகுப்பாளர் ஒருவர் தற்போது அரசியல் விமர்சனங்களை அதிக அளவில் பேசி வருகின்ற நடிகையான கஸ்தூரியிடம் முன்வைத்துள்ளார், அதற்கு அவர் கூறிய பதிலே தற்போது சமூக வலைதளம் முழுவதும் படுவைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று பிறகு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்குள் நுழைந்துள்ள கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவர் முன்வைக்கும் சில கருத்துக்கள் மற்றும் பதிவிடும் வீடியோக்கள் அனைத்துமே சில நேரங்களில் இவருக்கே பல விமர்சனங்களை பெற்று கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது கருத்தின் ஒவ்வொன்றிலுமே திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் சரமாரியாக தாக்கி வந்துள்ளார் கஸ்தூரி. அப்படி சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கஸ்தூரி நம்ம நாட்டின் மற்றொரு பெயர் தான் பாரதம் என்பதை ஆணித்தரமாக பாரதியின் பாடல் மூலம் கூறியுள்ளார்.
அதாவது இந்த நாட்டின் அதிகாரப்பூர்வமான பெயர் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு, இந்தியா என்பது பாரதம் தான்! பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம், மிடிப் பயங்கொல்லுவோம், துயர்ப் பகைகொல்லுவோம்! என பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி அந்த தொகுப்பாளரை வாய் அடைக்க செய்துவிட்டார். இருப்பினும் பாரதியார் சாதி இல்லையடி பாப்பா என்று கூறினார் ஆமாம் அதை ஏற்றுக் கொண்டோம் தானே!! என்று மீண்டும் கஸ்தூரி பதிலடி கொடுத்தார். மேலும் அன்று பாரதி கூறிய வார்த்தை இன்று கெட்ட வார்த்தையாக மாறிவிட்டது, அதை யார் மாற்றினார்கள் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என தடாலடியாக கஸ்தூரி பேசியது தற்போது இணையத்தில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.