2k ஹிட்ஸுகளின் பைக் ரேஸரான டிடிஎஃப் வாசன். விலை உயர்ந்த வாகனங்களை கொண்டு வீலிங் செய்வதும் சாகசம் செய்வதும் இவருக்கு பின்னனால் ஒரு கூட்டம் உருவானது. இப்படி வளர்ந்து வரும் இவர் தான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார். போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் அதிவேகமாக செல்வது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவாகின.
அதனை தொடர்ந்து, கடந்த வருடம் காஞ்சிபுரம் அருகே சாலையில் செல்லும்போது வீலிங் செய்து சாலையில் விபத்துக்குள்ளாக்கினார். மருத்துவ சிகிச்சையெல்லாம் முடிந்து அவரை போக்குவரத்து மீறலை மீறியதாக காவல்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 45 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அவரது ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யபட்டது. இதனால் அவரால் பைக், கார் ஓட்டுவதை நிறுத்தினார். தொடர்ந்து, சைலண்டாக இருந்து வந்த அவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்றுள்ளார். இந்த வேளையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து ஆயுதப்படை போலீசார் அளித்த புகாரின் பேரில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் கீழ் போலீசார் தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்பட 6 பிரிவுகளில் வாசன் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தது காவல்துறை. மீன்டும் மாவு கட்டுடன் வெளியே வருவார் வாசன் என்று இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் இதனை அரசியலாகவும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.
அதாவது, பிரபல யூட்யூபரான இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து பொதுவெளியில் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக சுகாதார துறை ஆணையம் கூறியது. இர்ஃபான் தனது யூடூப்பில் வெளியிட்டதால் சுமார் 10 லட்சம் வரை பார்த்தனர். அதற்கு இர்பான் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுவரை இர்பான் மீது ஒரு வழக்கு கூட பதியவில்லை ஆனால், வாசன் மீது உடனடியாக வழக்கு பதிந்து அவரை கைது செய்தது காவல்துறை இது தான் காவல்துறையின் செயல்பாடுகளா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஒருவாரம் ஆகியும் இர்பான் மீது நடவடிக்கை இல்லை, ஒரு நாளில் வாசனை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
ஒருபக்கம் இர்பான் அமைச்சர் உதயநிதியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இர்பான் போன்று வாசனும் உதயநிதியுடன் அல்லது திமுக நிர்வாகிகளுடன் இருந்திருந்தால் இப்படி வழக்கு மேல் வழக்கை சந்திக்க தேவையில்லை என வாசனுக்கு ஆதரவாக ஒரு கும்பல் பதிவு செய்து வருகின்றனர். சட்ட விதிமீறல்களை இரண்டு பேரும் தான் மீறினார்கள் ஆனால், ஏன் ஒரு தலை பட்சமாக காவல்துறை செயல்பட்டுகிறது என்ற கேள்வியை தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளனர்.