24 special

மொத்த பிக்பாஸ் கும்பலுக்கும் ராதிகா அடித்த அடி.... இது லிஸ்டிலேயே இல்லையே...

rathika,kamalhasan,bigg boss
rathika,kamalhasan,bigg boss

பிக் பாஸ் எனப்படும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதுவரை 6 சீசன்களை முடித்துவிட்டு தற்பொழுது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்து கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்! நடிப்பு, அரசியல் என அவ்வப்போது சென்று வரும் கமலஹாசனுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெருமளவில் விளம்பரத்தை தருகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 


இது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மனிதர்களுக்குள் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியாக இருந்தது, நாளடைவில் பிக் பாஸ் வன்ம நிகழ்ச்சியாக நிகழ்ச்சியாக மாறிவிட்டது எனவும் விமர்சனங்கள் பறக்கிறது. 

மேலும் இந்த சீசனில் முதலில் பிரதீப் வெளியேற்றம், அடுத்து விசித்திரா சொன்ன பாலியல் புகார் என தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்தாலும் இன்னமும் பிக் பாஸ் நிகழ்ச்சி பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ராதிகா சரத்குமார் கூறிய விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் படு வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. 

வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் நடந்தது. இந்த விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார், அப்போது குத்துவிளக்கேற்றி அந்த விழாவை தொடக்கி வைத்துவிட்டு செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ராதிகா சரத்குமார் பேசினார்.

அப்போது அவர் கூறும்பொழுது 'நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பற்றி மருத்துவர்கள் பேசி விட்டார்கள். சீரியல் பார்த்தாலும் நீரிழிவு நோய் வந்துவிடும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்ல சீரியலாக இருந்தாலும், கெட்ட சீரியலாக இருந்தாலும் நீரிழிவு வருமாம் நமது வாழ்வியல் முறையும் இதற்கும் காரணம். 

நம்முடைய வாழ்வியல் முறை நமக்கு பழக்கம் இல்லாத ஒன்றுதான், ஆனால் திடீரென்று ஏற்படுத்திக் கொண்ட ஒன்று சக்கரை நோய் வராமல் தடுக்க ஒரு மருந்து கொடுக்கிறோம், அதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது என்கிறார்கள். அந்த மருந்தின் விலை மிகவும் அதிகம், அதன் விலை 300 டாலர்களாக இருந்தது.  சரி காரில் உட்கார்ந்து கொண்ட அந்த மருந்து என்னவெல்லாம் இருக்கிறது என பார்த்தேன் அதிர்ச்சியாக இருந்தது, அதில் வேப்பிலையை மருந்தாக பயன்படுத்தி உள்ளார்கள். 

நம் வீட்டிலேயே வேப்பிலை இருக்கும்போது அதை 300 டாலர் கொடுத்து வாங்கி விட்டேன். ஆனால் அது எனக்கு நல்ல பலனை அளித்தது. எல்லா வீடுகளிலும் வேப்பிலை இருக்கிறது ஆனால் நான் அதை காசு கொடுத்து வாங்கினேன். நம்மிடம் இருக்கும் வேப்பிலையை வெளிநாட்டவர்கள் கொண்டு போய் அதை நமக்கு மருந்தாக மீண்டும் தருகிறார்கள் எனக் கூறினார்.

மேலும் அவர் கூறியது தான் ஹைலைட் 'இன்று போனில் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நேற்று விமான நிலையத்தில் செக்கிங்ற்காக காத்திருந்தேன் அப்போது அங்கிருந்த பெண் வெயிட் வெயிட் என கூறிவிட்டு ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தார். நானும் என்னதான் பார்க்கிறார் என பார்த்தால் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருந்தார். 

உடனே நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கும்? இரண்டு பேர் அடித்துக் கொள்வார்கள், பிறகு சண்டை போடுவாங்க, கண்ணா பின்னா என திட்டிக்கொள்வார்கள் அதை நான் சொல்றேன் வாமான்னு  கூப்பிட்டேன். இதெல்லாம் பொழுது போக்குதான் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் முதலில் நம் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும்' என பேசி இருந்தார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ரெண்டு பேரும் அடிச்சுக்குவாங்க, சீக்கிரம் சேர்ந்து வாங்க இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என ராதிகா ஜஸ்ட் லைக் தட் சொன்ன விவகாரம் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது.