லைக்கா அதிரடி அமலாக்கத்துறை சோதனை சிக்க போவது யார் லைக்கா புரொடக்ஷன் என்பது திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும், இந்த புரொடக்ஷன் சுபாஸ்கரன் அல்லி ராஜா என்பவருக்கு உரிமையானது. 2008 ஆம் ஆண்டில் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தை வெளியிட்ட ஞானம் பிலிம் என்ற பெயரில் தயாரித்தவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, இதனுடன் அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமாக 2014 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படத்தின் முதல் கோலமாவு கோகிலா, வடசென்னை, காப்பான், டான் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன், இந்தியன் டு ஆகிய படங்களையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தில் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடந்து வருகிறது. லைக்கா மொபைல்ஸ் என்று தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த இங்கிலாந்தில் வாழும் இலங்கை தொழிலதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார். உலகம் முழுவதும் இவருடைய செல்போன் நிறுவனம் 17 நாடுகளுக்கு மேல் சேவை இணைப்புகளை வழங்கி வருகிறது மேலும் இவர் உலகில் சிறந்த தொழிலதிபர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரித்திருந்தது. அடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது இந்த நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனத்தில் சோதனை நடத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சினிமா படங்களை தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று முதலீடு செய்துள்ளது, இந்தப் பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
புகார் எழுந்துள்ள காரணத்தினாலேயே நேற்று அதிகாலையில் இருந்தே சென்னையில் தி நகர், அடையார், காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள லைக்கா பட நிறுவனத்தில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் லைக்கா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளுக்கான ஆவணங்களை கேட்கும் பொழுது உரிய கணக்கு இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு பண பரிவர்த்தனைக்கான சில ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த வாரம் வருமானவரித்துறையினர் சோதனை இறங்கியதும், அதன் தொடர்ச்சியாக தற்போது அமலாக்க துறை லைக்கா நிறுவனத்தில் சோதனையில் இறங்கியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த வாரம் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக துறையினர் சோதனை நடத்தினர் மேலும் அந்த சோதனையில் ரூபாய் 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை இதுவரை அதிரடி ரைடில் தமிழகத்தில் அதிகளவு ஈடுபட்டவில்லை ஆனால் தற்போது அமலாக்க துறை அதிரடி ரெய்டு லைக்கா நிறுவனத்திடமிருந்து தொடங்கியுள்ளது. சமீபகாலமாக அமலாக்க துறையின் சோதனை அதிகமாக இல்லாத நிலையில் முதற்கட்டமாக லைகாவில் இறங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அமலாக்க துறை இன்னும் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இனி நடக்கவிருக்கும் அமலாக துறையின் சோதனையில் சிக்கவிருப்பது யார்? என தமிகத்தின் முக்கிய புள்ளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.