விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராக இருக்கும் விக்ரமன் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளவர் மேலும் சில முக்கிய சீரியல்களிலும் நடித்து யூடியூப் பிரபலமாகவும் மாறினார். அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். விக்ரமன் இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஆகவும் லண்டனில் தற்பொழுது ஆய்வு பட்டம் மேற்கொண்டு வருபவராகவும் உள்ள பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அந்த புகாரில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன் எனக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கமானவர்.
காலப்போக்கில் நாங்கள் மிகவும் நெருக்கமானவர்களாக மாறினோம் அதனைத் தொடர்ந்து அவர் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இப்படி ஆசைவார்த்தைகளை கூறியே படிப்படியாக என்னிடம் கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டார். ரொக்க மட்டுமின்றி உயர் ரக லேப்டாப் மற்றும் செல்போன் கூட வாங்கிக் கொடுத்துள்ளேன் இவ்வனைத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்ட விக்ரமன் தற்போது என்னை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்து வருகிறார் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து நான் விக்ரமனிடம் கேட்டபோது அவர் என்னை ஜாதி பெயரை கூறி திட்டினார் இப்படி என்னை ஏமாற்றியதற்காகவும் என்னை தவறாக திட்டியதற்காகவும் விக்ரமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்பாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் இதே பெண் இது குறித்து கடிதம் எழுதியிருந்தார் ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி விக்ரமன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலே தற்போது இந்த காவல்துறையிடம் புகாரையும் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.இதனை தொடர்ந்து விக்ரமன் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் 13 வழக்குகளின் கீழ் காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான விக்ரமன் குறித்து பரபரப்பாக பேசப்படும் நிலையில் விக்ரமின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவரை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறதாகவும் விடுதலை சிறுத்தைகள் தரப்பில் தகவல்கள் வெளியானது. இதற்கு அடுத்து விக்ரமன் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை விடுதலை சிறுத்தைகள் தரப்பிலும் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை! கடந்த சில மாதங்களாகவே இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறமே வெல்லும் என்ற முழக்கத்தை நிகழ்ச்சி முழுவதும் பேசிக்கொண்டு இருந்த விக்ரமன் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்ததும் அதனை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் "தொடர் நியாயம் பேசி வருவார்கள் ஆனால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக தலைமறைவாகி விடுவார்கள் இதுதான் இடதுசாரிகளின் வழக்கம்!" என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் தன் மீது பொய்யான புகாரை அப்பெண் கொடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகளின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் பொதுவெளியில் விக்ரமன் சில நாட்கள் தலைகாட்ட வேண்டாம் இது தேர்தல் நேரம் என விசிக தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன.