ஒவ்வொரு முறை திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பொழுது முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பாராட்டு விழாவை கொண்டாட தவறியது இல்லை. அதன்படி திமுக 2006 முதல் 2011 ஆட்சி அமைத்த பொழுது பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா என்ற தலைப்பில் கருணாநிதி அவர்களுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியையும் நடத்தி பிரமாண்டமாக நடைபெற்றது, அதை பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் ஏனென்றால் முக்கிய சினிமா பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார் என்பதால்! அதேபோன்று 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பிரமாண்ட நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்பார்த்த அளவிலான கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானம் என்பதே மிகப்பெரிய மைதானம் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சிலர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் வெளியானது! அதுமட்டுமின்றி இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் ஆன ரஜினி, கமல், சூர்யா தனுஷ் போன்றவர்கள் கலந்து கொண்டதாகவும் நடிகைகள் தரப்பில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா மற்றும் ரோஜா போன்றவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்பார்த்து அளவிற்கு மக்களும் திரை பிரபலங்களும் இதில் வராமல் இருந்தது கலைஞர் 100 நிகழ்ச்சியில் சொதப்பலை ஏற்படுத்தியது..அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குழப்பத்திலே நடந்து உள்ளதா கூறப்படுகிறது, அதாவது மைக் கோளாறு நிகழ்ச்சி நிரல் என்ன என்ற குழப்பம் லைட் கோளாறு என பல குறைபாடுகள்! இதனால் திமுகவினர் இந்த நிகழ்ச்சியால் கடும் அதிருப்திகளை பெற்றதோடு இதுபோன்ற முன்னேற்பாடுகள் மற்றும் நல்ல திட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடந்த சில முக்கிய சுவாரசிய நிகழ்ச்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது, அதில் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் இரு பெரும் முக்கிய நடிகைகளுக்கு இடையே ஒரு தீ பற்றவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் உதயநிதி நடிப்பு சமீபத்தில் வெளியான படம் மாமன்னன் படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார், மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞர் 100 விழாவின் மேடையில் கீர்த்தி சுரேஷ் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நயன்தாராவிற்கு மேடையில் பேச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை! இதனால் கீர்த்தி சுரேஷ் மேடையில் பேச ஆரம்பித்த உடனே நயன்தாரா அந்த நிகழ்ச்சியை விட்டு புறப்பட்டு சென்று விட்டார்.
ஏனென்றால் உதயநிதி திரையுலகில் நடிக்க ஆரம்பித்த தொடக்கத்தில் நண்பேண்டா மற்றும் இது கதிர்வேலன் காதல் என்ற இரண்டு திரைப்படங்களில் நடிகையாக நடித்தவர் நயன்தாரா! தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்ற தமிழ் திரை நடிகர்கள் கலந்து கொள்ளாத போதிலும் எந்த பொது நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நயன்தாரா கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இருப்பினும் கீர்த்தி சுரேஷ் அளிக்கப்பட்ட வாய்ப்பு நயன்தாராவுக்கு கொடுக்கப்படவில்லை இதனால் கீர்த்தி பேச ஆரம்பித்த உடனே நயன்தாரா அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அப்பொழுது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்ட காட்சிகளும் இணையங்களில் தற்போது அதிகமாக உலா வருகிறது.