சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஆவணங்களை சென்னை முதல் அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை 3000 பக்கமாக தாக்கல் செய்தது.
இந்த நிலையில் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விட வேண்டும் எனக் கூறிய சென்னை முதல் அமர்வு நீதிமன்றத்தில் இருமுறை மனதாக்கல் செய்தார், இந்த மனுக்கள் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதி களின் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது, இதனை அடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
எப்படியாவது இந்த முறை ஜாமீன் கிடைத்துவிடும் என செந்தில் பாலாஜி தரப்பு எதிர்பார்த்தது, மேலும் அந்த மனுவில் உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாக குணமடையவில்லை எனவும், தனக்கு உடல் நலக்குறைவு மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி உடல் நல குறைவு ஏற்படும் பட்சத்தில் திரும்ப அறுவை சிகிச்சையோ அல்லது தீவிர சிகிச்சையோ மேற்கொள்ள ஏற்படும் நிலை வரும் எனவும் வெளியில் விட்டால் சில மருத்துவமனைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அதன்படி உடல் நிலையை தேற்றி விடுவேன் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் உருக்கமான மனு நீதிபதியிடம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த பொழுது அத்தனை கோரிக்கைகளையும் படித்துப் பார்த்த நீதிபதி பின் பொறுமையாக உங்கள் மருத்துவ காரணத்தை எல்லாம் நாங்கள் ஜாமீனுக்காக ஏற்க முடியாது, இது மட்டுமல்லாமல் உங்கள் சகோதரர் இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறார் வெளியில் இருப்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறியது செந்தில் பாலாஜி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எப்படியும் உடல்நிலையை காரணம் காண்பித்து நாம் வெளியில் சென்றுவிடலாம், நமக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது இதனை காரணமாக வைத்து ஜாமின் கேட்டால் நீதிபதி கொடுத்துவிடுவார்! கருணை அடிப்படையிலாவது நமக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த செந்தில் பாலாஜிக்கு இந்த ஜாமீன் கிடைக்காமல் தள்ளிப் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே எனக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்றால் நீ வந்து சரண்டாக வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து செந்தில் பாலாஜி சகோதரருக்கு தூது அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நான் சரணடைந்தால் உங்களை வெளியே எடுத்து விடுவார்கள் ஆனால் என்னை வெளியே எடுப்பதற்கு எப்போது வாய்ப்புகள் வரும் என தெரியாது, நான் வெளியில் இருப்பதே நல்லது எனக் கூறி செந்தில் பாலாஜி சகோதரர் மறுத்துவிட்டதாகவும் சிலர் தகவல்கள் கசிந்தது.
இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது செந்தில் பாலாஜி என் தம்பி வேண்டுமென்றே தான் தலைமுறைவாக இருக்கிறார் தான் மாட்டிக்கொண்டால் வெளியில் வருவது சிரமம் எனவே இனி மாட்டாமல் இருப்பதே நல்லது என நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் செந்தில் பாலாஜியின் தம்பி வெளியில் இருக்கும் காரணத்தினால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இதன் காரணமாகவே தம்பியாலே தனக்கு ஜாமீன் கிடைக்காமல் போய்விட்டது என செந்தில் பாலாஜி தனது தம்பி அஷோக்குமாரை நினைத்து புழல் சிறையில் புலம்புவதாகவும் சிலர் தகவல்களை கசியவிடுகின்றனர்.