24 special

உதயநிதி அமைச்சர் பதவியே ஆட்டிவைத்த விவகாரம்...! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பாவ பரிகார பூஜையா...?

udhayanithi
udhayanithi

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் திமுகவிற்கு எதிர் வினையாக மாறியது. ஒருபுறம் I.N.D.I.A கூட்டணியில் இருந்து திமுகவை விலக்கி வைக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்ததும், மறுபுறம் அமைச்சர் பதவியை குறிவைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதும், நீதிமன்றத்தில் சென்று ஒரு அமைச்சராக நான் பேசவில்லை என உதயநிதி கூறியதும் கிட்டத்தட்ட திமுகவிற்கு இது போதாத காலம் என்னும் அளவிற்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தி வந்தது. 


இப்படி சனாதன விவகாரத்தை பற்றி உதயநிதி பேசியது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்தல் வரும் பொழுது உதயநிதிக்கு இந்த விவகாரத்தால் அரசியல் ரீதியாக குறிப்பாக வரும் தேர்தல் உதயநிதி முன்னேற்பாட்டில் தான் பிரச்சாரம் மற்றும் களப்பணி எல்லாம் நடக்கப் போகிறது இந்த நிலையில் சன்னாதான விவகாரத்தில் உதயநிதிக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது வரும் காலங்களில் கண்டிப்பாக உதயநிதி அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என முதல்வர் குடும்பம் பயந்து வந்ததாக சில தகவல்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீர்காழியில் உள்ள பைரவரை சென்று முதல்வரின் மகளும், உதயநிதியின் சகோதரியுமான  செந்தாமரை தரிசனம் செய்தார், அதேபோல் திருப்பதியில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு தரிசனம் செய்தார். 

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோயிலுக்கு சிறப்பு பூஜையுடன் தரிசனம் செய்துள்ளார் முதல்வர் மனைவி, நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தரிசனம் செய்ய முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார். அங்குள்ள கருடாழ்வார், மூலவர் ரங்கநாதர், தன்வந்திரி, தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தார். 

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் இது குறித்து கோவில் வட்டாரங்களில் விசாரித்த பொழுது ஐப்பசி மாசத்தில் சூரியன் துலா ராசியில் சந்திப்பதால் இந்த மாதம் துலா மாதம் என அழைக்கப்படுகிறது. 

இந்த நேரத்தில் துலா ஸ்னாநம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை நேற்று ஐப்பசி முதல் நாள் என்பதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு காவிரி நதியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து மேல தானங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்குவது மட்டுமல்லாமல் முக்கியமாக பாவங்கள் மீண்டும் என்பது நீண்ட நாள் நம்பிக்கை இந்த நாளில் தான் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் ரங்கநாதரை வந்து தரிசனம் செய்துள்ளார் என கோவில் தரப்பில் விசாரித்த பொழுது சில தகவல்கள் கூறப்பட்டது. 

ஏற்கனவே சனாதன விவகாரம் உதயநிதிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாவம் நீங்கும் பரிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் மனைவி செய்துள்ளாரோ? என பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த பொழுது முதல்வர் மனைவி அடிக்கடி கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவர் அவர் கோவில் செல்வது எப்பொழுதும் போல வேண்டுதலுக்காகத்தான் தவிர தனியாக ஏதும் சிறப்பு காரணங்கள் இல்லை எனவும் கூறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது...