24 special

2026 வரைக்கும் தாங்காது போலவே ...! நாள் குறித்த அண்ணாமலை...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை சொன்னபடியே வெளியிட்டார். இந்த சொத்து பட்டியலில் விளக்கமாக அமைச்சர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்புகளை விட அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களையும் அண்ணாமலை இணைத்து திமுகவின் சொத்து பட்டியலை வீடியோவாக வெளியிட்டார். வீடியோ வெளியாகி ஒரு வாரத்திற்கு அதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் தராமல் இருந்தனர். ஏன் அந்த பதிவில் முதல்வர் மற்றும் அவரது மகன், மருமகன், சகோதரி மற்றும் பல முக்கிய திமுக மூத்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சொத்து பட்டியலில் இடம் பெற்றிருந்த ஒவ்வொருவரும் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர் இருப்பினும் அண்ணாமலை இதில் பின் வாங்காமல் அனைத்து ஆதாரங்களின் நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். 


பிறகு கர்நாடகா தேர்தல் பணிகளை முடித்துவிட்டு திரும்பிய பொழுது திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரத்திலும் தமிழக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாதயாத்திரையை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார். இந்த பாதயாத்திரையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்வதற்கு என் மண் என் மக்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயலியை உபயோகப்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அண்ணாமலை இந்த அறிவிப்பிற்கு பிறகு திமுக பல அமைச்சரவை பல சரிவுகளை சந்தித்தது, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை தொடர் சோதனைகள், மக்களிடையேவும் பல போராட்டங்கள் என்று பல நிகழ்வுகள் திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. 

இந்த நிலையில் டி எம் கே பைல்ஸ் இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் கூட இடம்பெறும் என்று கூறியது வேறு திமுகவினரை கதி கலங்க வைத்துள்ளார். ஏற்கனவே முதல் பாகம் வெளியிட்டு அதற்காகத்தான் நாம் அமைச்சரவையே மாற்றினோம் இந்த நிலையில் மறுபடியும் இரண்டாம் பாகம் வெளியானால் நாம் மொத்தம் அமைச்சரவையும் அவ்வளவுதான் என அறிவாலய சில தலைவர்கள் புலம்பி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதற்கான நாளையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அதுவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசிர்வாதத்துடன் டிஎம்கே பைல்ஸ் இரண்டாம் பாகம் வெளியீடு நிகழ உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

லண்டன் சென்று விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் டிஎம்கே பைல்ஸ் பார்ட் 2 மற்றும் பாதயாத்திரைக்கான கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேதிக்காக மட்டுமே தற்போது காத்துக் கொண்டிருக்கிறோம் அவர் தேதி குறிப்பிட்டதும் இரண்டுமே நடந்து விடும் என்று கூறியுள்ளார். 

முன்னதாக டிஎம்கே ஃபைல்சின் முதல் பாகம் வெளியிடும் பொழுது அமித்ஷா வருகை தரவில்லை, ஆனால் தற்போது இரண்டாம் பாகத்தில் அவர் வருகை தர உள்ளார் என்பது நிச்சயமாக முக்கியமான பாகமாக அது திகழும் என பாஜகவினரால் பார்க்கப்படுகிறது.  இது திமுகவினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டி.எம்.கே பைல்ஸ் வெளியிடும் பொது உள்துறை அமைச்சர் அமித்ஷா இருந்தால் அது தேசிய நிகழ்ச்சி, திமுக சொத்துப்பட்டியல் தேசிய அளவில் கவனம் பெரும் என்பது அண்ணாமலையின் அரசியல் கணக்கு என கமலாலய வட்டாரங்கள் கிசுகிசுகின்றன! தொடர்ச்சியாக வருமானவரி துறை மற்றும் அமலாக்க துறையின் கண்காணிப்பில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் இருந்து வரும் பொழுது இது போன்ற தகவல்கள் வெளிவருவது திமுகவிற்கு நல்லது இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.