24 special

இனி தான் ஆட்டமே ஆரம்பம்...!ஆளுநரின் புது திட்டம்...!

Rn ravi ,senthilbalaji
Rn ravi ,senthilbalaji

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை ஆளுநர் வாபஸ் பெற்று விட்டதாகவும் இதுதான் திமுகவின் பலம் என திமுகவினர் கொண்டாடி வரும் வேலையில் சற்றுமுன் ஆளுநர் நடவடிக்கையின் பின்னணி தகவல் வெளியாகி திமுகவினர் முன்பை காட்டிலும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது தவறானது என்று முதல்வர் பரிந்துரை செய்த கடிதத்தை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்தசூழலில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார் இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரோயகம் செய்து விசாரணையில் செல்வாக்கு செலுத்தி சட்டம் மற்றும் நீதி வழங்குவதை தடுக்கிறார்.

அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற காவலில் உள்ளார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தின் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அம்சங்கள் உள்ளது. இதனால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ரவி உடனடியாக நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி அமைச்சர் பதவி நீக்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் செந்தில் பாலாஜியின் நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து இன்றே உச்ச நீதிமன்றதை நாட திமுக முடிவு செய்து இருந்தது மேலும் ஆளுநர் உத்தரவிற்கு ஆம் ஆத்மீயை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவை மேற்கோள் காட்டவும் திமுக தயாரானது.

இந்த நிலையில் தான் உடனடியாக ஆளுநர் தரப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த கடிதம் பறந்தது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பாதாக ஆளுநர் மாளிகை தெரிவித்து இருக்கிறது.

நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை திரும்ப பெறுவதாக எங்குமே ஆளுநர் குறிப்பிடவில்லை மாறாக ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைப்பதாகவே தெரிவித்து இருக்கிறார் இங்குதான் திமுகவிற்கு தற்போது விஷயம் தெரிந்து இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதை நீக்கம் செய்யவேண்டும் என ஆளுநர் முதல்வருக்கு அறிவுறுத்திய பின்னரும் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் அமைச்சராக வைத்து இருக்கிறார் எனவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

அப்போது ஆளுநர் முதல்வருக்கு எப்போது செந்தில் பாலாஜியை நீக்க கோரி கடிதம் எழுதினார் என்பதை விளக்க முடியுமா என கேட்ட நீதிமன்றம் ஆளுநர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய கோரி வழக்கை ஒத்தி வைத்தது.

விரைவில் அந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வர இருக்கிறது, எனவே தற்போது ஆளுநர் முதல்வருக்கு எழுதிய கடிதம் உண்மை என நேற்று நிரூபணம் ஆகியிருப்பதால் விரைவில் உயர் நீதிமன்றமே செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து இறுதி முடிவு எடுக்க ஆளுநர் நேற்று முதல்வருக்கு அனுப்பிய கடிதம் முக்கிய திருப்பமாக அமைய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ஒரு முடிவை எடுக்கிறார் என்றால் ஒன்றிற்கு 10 முறை ஆலோசனை செய்யாமலா எடுப்பார் இனிதான் ஆட்டமே இருக்கிறது என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.இது ஒருபுறம் என்றால் ஆளுநர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட வாசகங்கள் தான் இப்போது ஒட்டுமொத்த திமுகவையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது அது குறித்து முழுமையாக அடுத்த வீடியோவில் பார்க்கலாம் மறக்காமல் tnnews24digital பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.