24 special

பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் நடந்த சோகம் !

annamalai
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்றைய தினம் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசான திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அளவு குறைக்க கோரி மிக பெரிய பேரணியை பாஜகவினர் நடத்தினர், பேரணியின் இறுதியில் அண்ணாமலை மற்றும் பிற பாஜகவினரை கைது செய்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அண்ணாமலையை கைது செய்யாமல் பாதுகாப்பாக போலீசார் வழி அனுப்பி வைத்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.


இந்த சூழலில் ஏன் அண்ணாமலையை போலீசார் கைது செய்யவில்லை, அண்ணாமலை விவகாரத்தால் பாதியில் சென்ற முதல்வர், அண்ணாமலையின் அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன செய்யவேண்டும் என சில பத்திரிகையாளர்கள் கூடி எடுத்த முடிவு ஆகியவற்றை தெளிவாக சேகரித்து இருக்கிறது TNNEWS24 அவற்றை பார்க்கலாம்.

தமிழக பாஜக சென்னையில் நடத்திய பேரணியில் 10 ஆயிரம் பேரை திரட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றது, இந்த சூழலில் பல மாநில, மாவட்ட நிர்வாகிகள் புதிதாக பொறுப்பிற்கு வந்த சூழலில் தங்களது திறமையை நிரூபிக்க, பல்வேறு இடங்களில் இருந்து போட்டி போட்டு ஆட்களை திரட்டி வந்தனர், இதனால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் குவிந்தனர்.



இந்த சூழலில் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி வராமல் தடுக்க தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர், போக்குவரத்து மாற்றம், கைது செய்ய வாகனங்கள் என முழு பலத்துடன் காவல்துறை தரப்பு தயாரானது.

மேலும் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோர் நடைபயணம் மேற்கொண்டால் அவர்களை கைது செய்து மண்டபம் ஒன்றில் தங்க வைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன, ஆனால் இறுதியில் மிக மிக முக்கிய பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் இருந்து யாரையும் கைது செய்ய வேண்டாம் அவர்களை சமாதானமாக பேசி அனுப்பி விடுங்கள் என்று உத்தரவு வர அதையே செய்து இருக்கின்றனர் காவல்துறையினர்.

இதற்கு காரணமாக பார்க்க படுவது, பாஜகவினர் இத்தனை ஆயிரம் பேர் சென்னையில் கூடுவார்கள் என காவல்துறை கணக்கிடவில்லை மற்றொன்று பாஜக நிர்வாகிகளை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து ஒரு வேலை அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியேறமாட்டோம் என அங்கு போராட்டத்தை தொடங்கினால் அது இந்திய அளவில் தலைப்பு செய்தியாக மாறும் என்பதால் காவல்துறை தரப்பில் சுமுகமாக பேசி அனுப்பி வைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் என்றால் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார் , தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்க்கெட்டு இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் , 'நானும் இருக்கிறேன் என்பதற்காக எதையாவது எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜாதி சண்டைகள், கலவரங்கள், கூட்டு வன்முறைகள் நடைபெறவில்லை. சட்டம் -ஒழுங்கு சரியாக இருக்கிற காரணத்தினால் தான் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.

அதே நேரத்தில் அண்ணாமலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அரசியல் செய்கிறார் நாங்கள் மக்களுக்கு செய்கிறோம் என சுருக்கமாக முடித்து கொண்டு நடையை கட்டிவிட்டார் முதல்வர், அண்ணாமலை பெயரை பயன்படுத்தவும் அவரை பற்றி பேசுவதை தவிர்க்கவும் முதல்வருக்கு அறிவுரை வழங்கப்பட்ட சூழலில் அதனை மீறியும் ஸ்டாலின் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என தெரிவித்தது அண்ணாமலை தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டதை உணர்த்தியுள்ளது நாளுக்கு நாள் அண்ணாமலை செயல்பாடுகள் மூலம் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை புறக்கணிப்போம் என சில பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர், இந்த சூழலில் அண்ணாமலை அண்ணாமலையின் நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னணி ஊடகங்கள் கலந்து கொண்டது, தீர்மானம் போட்ட சில பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த சூழலில் ஊடக தலைமை தங்களிடம் பணியாற்றும், செய்தியாளர்கள், நிருபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்து இருக்கிறது அதில் அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒரே அளவு கோட்டில் பார்ப்பது இல்லை ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என பாஜக குற்றசாட்டு வைக்கிறது, இந்த சூழலில் யாரும் யாருடைய பத்திரிகையாளர் சந்திப்பையும் புறக்கணிக்க கூடாது முறையாக செய்தியை சேகரித்து அனுப்புங்கள் என பல ஊடக தலைவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதையடுத்து வழக்கம் போல் பாஜக பேரணி குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த சூழலில் அதிர்ச்சி அடைந்த சில பத்திரிகையாளர்கள் அண்ணாமலையின் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளை கேட்க வேண்டும் என முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

இதில் கொடுமை என்னவென்றால் இதுநாள் வரை எந்த வித ஆதாரமும் இல்லாமல் கேள்விகளை எழுப்பியவர்கள் அண்ணாமலையை எப்படியாவது மடக்க வேண்டும் என பள்ளி குழந்தைகள் பாட புத்தகங்களை திருப்புவது போல் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு வகைகளில் தகவல்களை சேகரித்து வருகிறார்களாம்.

எப்படி இருந்த பத்திரிகையாளர்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டதே! அடுத்த செய்தியில் பாஜக திருச்சி பேரணியில் எடுக்க போகும் அதிரடி முடிவுகள் குறித்து விரிவாக பதிவு செய்ய இருக்கிறோம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.