நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராசில் பாஜக கட்சியின் முகாம் அலுவலகம் இன்று திறந்து வைத்தார் பாஜக இணை அமைச்சர் எல்.முருகன், தொடர்ந்து இந்நிகழ்ச்சியி பேசிய எல். முருகன் திமுக எம்பியில் ஊழல் வழக்கு குறித்து சரசமரியாக விமர்சித்தார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலில் தினமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் தொடங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து தமிழக அரசியலில் பாஜக தலைமையில் தனித்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் பாஜகவின் கட்சி அலுவலகத்தை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் கூடம் சென்னையில் நடைபெற்ற பொழுது அதில் 39 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து மக்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் மாநில தலைவர் அண்ணாமலை. இதற்கிடையில் இன்று பாஜக அலுவலகத்தை நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராசில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். பின், செய்தியர்களிடம் பேசிய இணை அமைச்சர், நீலகிரி தொகுதியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளீர் இந்த தொகுதியில் நீங்கள் நிற்க போகிறீர்களா என்ற கேள்விக்கு இணை அமைச்சர் எல்.முருகன் அது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
இப்போதைக்கு இங்கு ஒரு அலுவலகம் அமைத்து மக்களை சந்திக்க வேண்டும் என்று என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதுதான் மாநில தலைவர் அண்ணாமலையின் விருப்பம் கூட என்று கூறினார். இதற்கு அடுத்து மேட்டுப்பாளையத்தில் ஒரு அலுவலகம் தயாராகி வருகிறது. அங்கும் கூடிய விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக, மத்திய அரசு அனைவருக்கும் வீடு, வீடு வீடாக தண்ணீர் கொடுக்கும் திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் பயனாளிகளை நேரடியாக சந்திப்பது, பயனாளிக்கு உதவி செய்வது போன்ற செயல்களுக்கு இந்த அலுவலகம் இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இணை அமைச்சர் எல்.முருகன் நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு சம்பவம் நேற்று அமலாக்கத்துறை, நம்மளுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒரு மிக பெரிய ஊழல்வாதி. 1.76 லட்சம் கோடி ஊழல், 2ஜி ஊழல் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து தான் இன்னைக்கு அமலாக்கத்துறை மூலம் 15 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளனர். அவர் எந்த அளவிற்கு மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து நீங்கள் பார்த்து கொண்டு இருக்கீர்கள் செந்தில் பாலாஜி சொத்துக்குவிப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்மூடி மண் அபகரிப்பு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இப்போது ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது போன்று திமுக அமைச்சர்கள் சிக்கி வருகின்றனர். மக்கள் இதையெல்லாம் வெறுக்கிறார்கள். மக்களுக்கு ஒரு தூய்மையான அரசியல் வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்புகின்றனர் என்று திமுக அமைச்சர்கள் எம்பி குறித்து சாடினார்.