தற்போது வருமானவரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் இடம் திமுக வின் எம் பி ஆக இருக்கும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏழாவது நாளையும் தாண்டி சோதனை இட்டு வருகின்றனர் இதில் கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நான்கு பெட்டிகள் முழுவதும் பணம் மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தொழிலதிபராக இருக்கும் ஜெகத்ரட்சகனின் சொத்து பட்டியல் விவரம் தற்போது அரசியல் விமர்சகர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் இந்த பட்டியலை படிப்பதற்கு முன்பாகவே மொத்தமாக விவரமாக சொத்து பட்டியலை கூற வேண்டும் என்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும் என்று கூறி அதனை சுருக்கமாக விவரிக்கிறேன் என விவரித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள், அதில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் சென்னையில் 305 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பாரத் பல்கலைக்கழகம், தேராட்டூரில் ஜெகத் பல்கலைக்கழகம். ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள் பாரத் மருத்துவ கல்லூரி சென்னை, பாலாஜி மருத்துவ கல்லூரி சென்னை, தாகூர் மருத்துவக் கல்லூரி சென்னை, லட்சுமி நாராயண மருத்துவ கல்லூரி புதுச்சேரி, பாரத் பல் மருத்துவமனை சென்னை என தெரியவந்துள்ளது.
மேலும் ஜெகத்ரட்சகனின் தொடர்பில் இருக்கும் பிற கல்லூரிகள் பெயரும் வெளியாகியுள்ளது. அதன்படி பாரத் பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை, பாலாஜி அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி சென்னை, தாகூர் பொறியியல் கல்லூரி சென்னை, ஜெருசலேம் பொறியியல் கல்லூரி சென்னை, லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி சென்னை, ராமானுஜர் பொறியியல் கல்லூரி சென்னை, பாரத் சட்டக் கல்லூரி சென்னை, பாரத் வேளாண்மை கல்லூரி சென்னை, பாரத் கட்டடக் கலைஞர் கல்லூரி சென்னை, பாரத் திரைப்படக் கலையின கல்லூரி சென்னை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை, தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை, பாலாஜி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை, பாரத் மேலாண்மை கல்லூரி சென்னை, பாலாஜி மேலாண்மை கல்லூரி சென்னை, தாகூர் மேலாண்மை கல்லூரி சென்னை, ஜெருசலே மேலாண்மை கல்லூரி சென்னை, பாரத், பாலாஜி, லட்சுமி அம்மாள் போன்ற பெயர்களில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகள் சென்னை.
பாரத் செவிலியர் கல்லூரி சென்னை, பாலாஜி செவிலியர் கல்லூரிசென்னை, பாரத் என் முறை சிகிச்சை கல்லூரி சென்னை, பாலாஜி என் முறை சிகிச்சை கல்லூரி சென்னை, பாரத் மற்றும் பாலாஜி மருந்தாக கல்லூரிசென்னை, தாகூர் மருந்தாக்க கல்லூரி சென்னை, பாலாஜி மற்றும் ஹில்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி சென்னை, ஸ்ரீமதி லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக் அண்ட் மேல்நிலைப்பள்ளி சென்னை, பாரத் வித்யாசம் சிபிஎஸ்சி புதுச்சேரி, பாரத் தொழில் பயிற்சி பள்ளி, மெட்ராஸ் தொழில் பயிற்சி மையம் சென்னை என அனைத்து கல்லூரி நிறுவனங்கள் பட்டியலும் இணையங்களில் வெளியாகியுள்ளது. அதற்குப் பிறகு ஜெகத்ரட்சகனின் தொடர்பில் இருக்கும் ஹோட்டல்கள், நிலக்கரி சுரங்கங்களின் பட்டியலையும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.
இவை அனைத்தையும் வருமான வரித்துறை தோண்டி எடுத்தே இந்த அனைத்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொண்டு பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஜெகத்ரட்சகன் மீது பதியப்பட்டுள்ள கடந்த கால வழக்குகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த செந்தில் பாலாஜியாக இவரது விவகாரமும் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ரெய்டு முடிவடையும்போது நிச்சயம் ஜெகத்ரட்சகன் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகும் எனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன...