24 special

டெல்லியில் தமிழர்கள் "மானத்தை" வாங்கிய எம்.பிகள் வைரலாகும் வீடியோ...!

Dr balu
Dr balu

தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பி கள் சோனியா காந்தி நிற்பதை பார்த்ததும் ஓடி சென்றது இந்திய அளவில் கடும் கிண்டலுக்கு உள்ளாகி இருப்பதுடன் இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றும் விதமாக அமைந்து இருக்கிறது.


தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பி கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஓடி வந்து சோனியா காந்தியை சந்திக்க வருகின்றனர், சோனியா காந்தி ஓடி வரும் திமுக எம்பிகளை மெதுவாக நடந்துவருமாறு சைகை காட்டுகிறார், அப்போது மாணிக்கம் தாகூர் எங்களோடு ஓடி வந்தனர் என குறிப்பிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது, தன் மானம், திராவிட மாடல் என பேசும் திமுக எம்பிகள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை பார்த்தே இந்த பம்மு பம்முகின்றனரே, இவர்கள் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்து இருந்தால் சோனியா காந்தி காலில் கூட விழுந்து இருப்பார்கள் என கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.

பெரியார் மண், திராவிட மாடல், சுயமரியாதை என்று பேசும் திமுகவினர் சோனிய காந்தி காத்திருப்பதை பார்த்ததும் இப்படி ஓடி சென்று தமிழர்கள் மானத்தை கப்பல் ஏற்றி விட்டனரே எனவும் தமிழர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் தன்மானம் சுயமரியாதை என பேசும் திமுகவினர் டெல்லி சென்றால் சோனியா காந்தியை பார்க்க ஓடுவதும் தமிழகம் வந்தால் சுயமரியாதை பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இது குறித்து வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.